ஒரே இந்தியா - ஆனால்
29 மாநிலமாக பிரிந்துகிடக்கிறோம்...!
ஐம்பூதங்களை பங்கிடுவதிலும் - இங்கு
ஆயிரம் எல்லைகோடு பிளவுகள்...!
எப்பொழுது கண்டோம்
சமத்துவ இந்தியாவை...!
உணர்வுகளால் இந்தியன் - ஆனால்
உரிமைகளால்...???
நாடு வளம்பெற ஆயிரம் வரிகள்
வளம் பெறுவது யார்?
வளம் பெற்றது யார்?
தலை சாய்க்க வழியில்லாவிடினும்
தலைமைக்கு வரி கட்டவேண்டும்..
யார் கேள்விகேட்ப்பார்
யாருக்கு உரிமை உண்டு..!
சட்டங்களை நாடிச்செல்ல
பணபட்டங்களை நாடவேண்டும்..
உண்ண ஒரு சட்டம்
உடுக்க ஒரு சட்டம்
படுக்க ஒரு சட்டம்..
இவைகள் யாருக்காக...!
பட்டங்கள் பதவிகள்
சொத்துக்கள் சுகங்கள்
வியர்வைகள் வலிகள்
கொலைகள் கொள்ளைகள்
எதற்காக...!
கேள்விகேட்க்க தகுதி
நிமிர்ந்து செல்ல தகுதி
பார்வையிட தகுதி
பகிர்ந்துகொள்ள தகுதி
ஏன் இந்த தலைவிதி..!
உனது நாட்டை கேட்கமுடியுமா
உனது மாநிலத்தை கேட்கமுடியுமா
உனது மாவட்டத்தை கேட்கமுடியுமா
உனது பஞ்சாயத்தை கேட்கமுடியுமா
உனது கிராமத்தை கேட்கமுடியுமா
உனது உறவினர்களை கேட்கமுடியுமா
இதில் எங்கே சுதந்திரம்...!
மொழிகள் வேண்டும்
மாதங்கள் வேண்டும்
இனம் வேண்டும்
எப்போது சமத்துவம் வேண்டும்..!
நமக்குள்ளே உருவாக்கிக்கொள்ளும் சிக்கலான
வழிமுறைகளுக்கு நாம் இடும் பெயர்தான்
ஜனநாயகம்...!
No comments:
Post a Comment
Do U Like This...