Saturday, August 27, 2016

படிப்பு, உழைப்பு மற்றும் சேமிப்பில்.. சதிகோட்பாடுகள்!!!


20ம் நூற்றாண்டின் சதிகோட்பாடு...!

எவ்வளவு சம்பாதித்தாலும் மாசம் தாண்டமாட்டேங்கிறது
இப்படியே காலப்பயணம் மேற்கொண்டால்
கடைசியில் மிஞ்சிறது என்ன..!

படிப்பை விற்கும் பாடசாலைகள்
வீட்டுக்கு ஒன்றாய் வந்தாச்சு..
உழைப்பை வாங்கும் கம்பெனிக்காரன்
புதுசா நாலு திறந்தாச்சு..
சேமிப்பை பத்திரபடுத்தும் வங்கிக்காரன்
ஊருக்கு ரெண்டுன்னு முன்னேறியாச்சு...!

என் திறமை
என் உழைப்பு
என் சேமிப்புன்னு
வீட்டிலே வைத்தால்
கருப்புப்பணம்னு புடுங்கிக்கிடுறான்...!

யாருக்காக இந்த
இருபது வருட படிப்பு
நாற்பது வருட உழைப்பு
அறுபது வருட சேமிப்பு...!

கடைசியில் எனது மகனும் - இந்த
நாற்காலியில் அமர்ந்துகொண்டு
இப்படித்தானே யோசிப்பான்..!

என்ன மாற்றம் கண்டீர் - இந்த
கல்வி, உழைப்பு மற்றும் சேமிப்பால்..
முன்பு பண்ணையார்களிடம் கூலி
இன்று கார்ப்பரேட்களின் கூலி...!

இதில் ஜாதி, மதம், இனம் என்பது..
24 மணிநேர வாழ்க்கைப்போராட்டத்தில்
திணிக்கப்படும் வரி விளம்பரங்கள் தானே..!

படைப்போமா..
படிப்பு, உழைப்பு மற்றும் சேமிப்பில் சமநிலை
உடைப்போமா கோட்பாடுகளை...???

No comments:

Post a Comment

Do U Like This...