Wednesday, August 10, 2016

பறவைகளும்...! நண்பர்களும்...!



நீங்கள் இதில் யார்?
 
சிலநேரம் நண்பர்கள் பட்டாம்பூச்சி-போல
அழகாய் தோன்றி அமைதியாய் 
மறைந்துவிடுவார்கள்...!


சிலநேரம் நண்பர்கள் தேனீ-போல 
தேவைக்காக மட்டும் நம்மைசுற்றி 
அசைவாடிக்கொண்டே இருப்பார்கள்...!


சிலநேரம் நண்பர்கள் பருந்து-போல 
பெரியவன் என்ற தோரணையிலே 
வட்டமடிப்பார்கள்...!


சிலநேரம் நண்பர்கள் ஆந்தை-போல 
குறுகிய நண்பர்கள் வட்டத்திற்குள் அடைத்துகொண்டு 
இன்பம் காணுவார்கள்....!


சிலநேரம் நண்பர்கள் கிளியை-போல
கனிக்காக காத்திருந்து பஞ்சைப்பார்த்ததும் 
பறந்துவிடுவார்கள்...!


சிலநேரம் நண்பர்கள் மயில்-போல 
நேரம் வரும்போது மட்டும் 
தோகையைவிரித்து ஆடுவார்கள்...!


சிலநேரம் நண்பர்கள் காகங்கள்-போல 
கூப்பிடும் குரலுக்கு செவிசாய்த்து, எதுவாயினும் 
அதை பகிர்ந்து வாழ்பவர்கள்...!


சிலநேரம் நண்பர்கள் புறாவைப்-போல 
தன் துன்பங்களை அடக்கிக்கொண்டு பிறருக்கு 
சமாதான தூதுவராய் மாறுவார்கள்...!


சிலநேரம் நண்பர்கள் குயிலைப்-போல 
தோற்றத்தை விமர்சித்தாலும்
நடத்தையால் வசீகரிப்பார்கள்...!


சிலநேரம் நண்பர்கள் கொக்கு-போல 
விட்டுகொடுக்க மனமின்றி 
விடாப்பிடியாய் காத்துக்கிடப்பார்கள்...!


சிலநேரம் நண்பர்கள் குருவியைப்-போல 
ஆடிப்பாடுவதர்க்காகவே எந்த சூழ்நிலையிலும் 
நம்முடன் இருப்பவர்கள்...! 

அது எப்படி!!!
பறவைகளின் குணங்கள் உனக்கு தெரியும் - என
எனை திட்டாதீர்கள்... - ஏனெனில்
நான் என் நண்பர்களின் குணங்களை 
அறிந்து வைத்துள்ளேன்...!

No comments:

Post a Comment

Do U Like This...