Tuesday, April 1, 2014

எங்கள் ஊர்... இராமனாதிச்சன்புதூர் - RAMANATHICHAN PUTHUR


எங்கள் ஊர்... இராமனாதிச்சன்புதூர் - RAMANATHICHEN PUTHUR

தேரோடும் பவனியும்
வரப்பற்ற கழனியும்
சூழ்ந்து கிடக்கும் தரணியும்
எம்மவர்கள் கால்பதித்த இடமாகும்
அதுவே எங்கள் ஊராகும்..

வற்றாத குளமும் 
வானுயர்ந்த மலையும்
வஞ்சம் இல்லா மனமும் சூழ்ந்த பூமிதான் எங்களுடையது...

காட்டாறும் கண்விழிக்கும் எம்
ஆலயமணியின் ஓசையைக் கேட்டு...
தோப்புகளில் தென்னையும் வளைந்து கொடுக்கும்
எம்மவர்களின் உழைப்பை பார்த்து..
சேறும் சோறாய் மாறும்
எம்மவர்களின் பாதம் பார்த்து...

ஊரே சங்கமிக்கும்
புனிதர்களின் பெருவிழா...
மனத்துயர் நீக்கும் வழிபாடுகள்
மனதில் நிற்கும் கலைசுவடுகள்...
பங்குக்கு பகிர்ந்து கொடுக்க
கோவிலருகே இடமுண்டு...
இருப்பதை அள்ளி கொடுக்க
எம் மக்களின் மனமுண்டு...

ஆறும் குளமும்,
வரட்சியில்லா மனமும்....
காடும் மலையும்
அரண் போன்ற வீரமும்...
கோவிலும் வீடும்
குடியிருக்கும் குணங்களும்...
பெரியோரும் சிறாரும்
பெருமிக்கும் செல்வமும்....

கூடி வாழும் சமுதாயம்


எங்கள் இராமனாதிச்சன்புதூர்...

No comments:

Post a Comment

Do U Like This...