Wednesday, April 9, 2014

நல்ல தலைவரை தேர்ந்தெடுங்கள் ( SELECT A GOOD POLITICAL PERSON )


தயவுசெய்து இரண்டு நிமிடங்கள் ஒதுக்கி இதைப்படியுங்கள் நண்பர்களே...
இது உங்களுக்காக மட்டுமே...

ஒருமனிதன் இறக்கும் தருவாயில் தான் அவன் செய்த புண்ணியங்கள், பாவங்கள் அணைத்தையும் நினைவு கூறுவான்...

ஆனால் இன்று ஒவ்வொரு 5 வருட தேர்தலின்போதும், நாம் ஒவ்வொருவரும் நம்முடைய அவலங்களை உள்ளடக்கிக்கொண்டு, தன் கட்சி தலைவன் தான் நல்லவன் என்று பிறரை குறை சொல்லியே காலத்தை கழிக்கிறோம்....

நம்முள் அனைவரும் தனக்கு பிடித்த தலைவரை பெருமைப்படுத்தி கொண்டு, மற்ற போட்டியாளர்களின் தீயசெயல்களை பட்டியலிடுகிறோம். இந்த எதிர் பிரச்சாரம் தன் தலைவரை தாக்கும்போது நாம் ஏற்றுகொள்ள மறுக்கிறோம்.

இவ்வளவு அடுக்கடுக்கான குற்றங்களை ஒருவர்மீது ஒருவர் சொல்லும்போது, நாம் முன்னிறுத்தும் வேட்ப்பாளர் எதோ ஒரு விசயத்தில் நல்லவர் இல்லை என்று தெரிந்தும், அவருக்கு தோழ் கொடுத்து நிற்பது ஏன்...

நம்மை விட அவன் பெரியவனல்ல என்று காட்டிக்கொள்ளவா...

நமக்குள் இருக்கும் இந்த பிரிவினைதான், ஒவ்வொரு அரசியல்வாதிகளின் 5 வருட சொகுசு வாழ்க்கைக்கு காரணமாக அமைகிறது...

5 வருட காலங்களில் ஒருவன் செய்யும் அவலங்கள்... அந்த தேர்தலோடு களையப்படுகிறது. இனிவரும் காலங்களில் நாங்கள் இதையெல்லாம் செய்வோம் என அவர்கள் தேர்தல் அறிக்கையை நீட்டும்போது, இதற்க்கு முன்பு இவர்கள் காண்பித்த அறிக்கை இருட்டடிக்கபடுகிறது...

ஓட்டு போடும்போது தான் நமக்கு இத்தனை வேட்ப்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் எனதெரியவருகிறது, நாமும் நமக்கு நன்கு தெரிந்த பழகிப்போன சின்னங்களுக்கே வாக்களித்துவிட்டு வந்துவிடுகிறோம்.

அடுத்து 5 வருடங்கள் கழித்து....

நாம் ஏமாந்துபோகிறோம் என்பதை மட்டும் ஒத்துக்கொள்ள மறுக்கிறோம்.

பழகிப்போன சின்னங்களை, கொள்கைகளை களைந்து எறியுங்கள், நம்முள் நமக்கு தெரிந்த, நமக்காக வாழ நினைக்கும் நல்ல தலைவர்களை தேர்ந்தெடுங்கள்..

இல்லையெனில் அடுத்து 5 வருடங்கள் கழித்து இப்போது கெட்டவர் என நீங்கள் முன்மொளிந்தவரை, அப்போது நல்லவர் என்று அவருக்காக போஸ்டர்களும், வாழ்த்துமடல்களும் அச்சடித்துகொன்டே வருடங்களையும், வாழ்க்கைகளையும் இழந்து தவிப்பீர்...

சிந்தியுங்கள்.. நமது ஓட்டு நமக்காக வாழநினைக்கும் நம்மில் ஒருவருவருக்கே....

இது எனது கருத்து மட்டும் தான், இதில் உடன்பாடு இருந்தால் பகிரவும்...

நமக்காக... பிரிட்டோ ராஜ் (இராமனாதிச்சென்புதூர்)

No comments:

Post a Comment

Do U Like This...