தெளிந்த (அ) அசுத்த நீரா என்று பார்த்ததுமில்லை - அதில்
நீந்தாமலும், குளிக்காமலும் இருந்ததுமில்லை...!
சிறுவயதில் நான் வயல் மற்றும் வரப்புகளில்
பாம்பு மற்றும் பச்சிகளை கண்டு ஒதுங்கியதுமில்லை - அதில்
ஆடிபாடாமலும், ஓடிசாடாமலும் இருந்ததுமில்லை...!
சிறுவயதில் நான் காடுகள் மற்றும் தோட்டங்களில்
வெறும் கால்களில் நடக்க பயந்ததுமில்லை - அதில்
அலைந்துதிரியாமலும், களவாடாமலும் இருந்ததுமில்லை...!
சிறுவயதில் நான் மலை மற்றும் குன்றுகளில்
செல்போனும் செல்பிக்காக அலைந்ததுமில்லை - அதில்
மரம் மற்றும் மலையேருதலையும் விட்டதுமில்லை...!
சிறுவயதில் நான் குளம் மற்றும் குட்டைகளில்
நீச்சல் உடைகளில் குதித்ததுமில்லை - அதில்
மீன் பிடித்தலையும், சுட்டுதிண்பதையும் தவறியதுமில்லை...!
சிறுவயதில் நான் வீடு மற்றும் அயலான் முற்றங்களில்
நேரங்களையும், அசுத்தங்களையும் பார்ப்பதுமில்லை - அதில்
விளையாட்டும், வீண்பேச்சும் இல்லாமல் இருந்ததுமில்லை...!
சிறுவயதில் நான் பள்ளி மற்றும் டியூசன்களில்
பாடமும் புத்தகமும் என மூழ்கியதுமில்லை - அதில்
அரட்டைகளும், ஒழுங்கீனங்களும் குறையாதபாடுமில்லை..!
ஆனால் இன்று..
நீந்த மனதில்லை
ஆடிப்பாட நேரமில்லை
அலைந்துதிரிய விடுவதில்லை
செல்போனைவிட்டால் பொழுதுபோக்கில்லை
விளையாட, வீண்பேச ஆளில்லை
அரட்டைக்கு சட்டத்தில் இடமுமில்லை
கல்வியைதவிர கண்ணுக்கு வேறோன்றும் தெரிவதில்லை...!
இவைகள் யாவும்
இன்றும் மாறவில்லை
நாம் தான் மாறிவிட்டோம்..!
எல்லாம் உன்னை அழைக்கிறது...
நீதான் வாழாமல்
ஓடிக்கொண்டே இருக்கிறாய்
வாழ்க்கையை தேடி..!!!
- Britto Raj, Ramanathichen puthur