உனக்காக காத்து நின்றேன்...!
நான் வரைந்ததில்
தவறிய வரிகள் - வீழந்தன
உன் புன்னகையில்...*
மறைத்து வைத்த பொக்கிஷம்(ஆசைகள்) நான்
உனக்காக... - இன்றும்
மவுனமாய் ஆலமரத்தடியில்...*
நான் சேகரித்தது - உன்
நினைவுகளும், கையெழுத்தும் தான்
அதனால் தான் என்னவோ - இன்றும்
உன் நினைவுகளை கிறுக்கி கொண்டே உள்ளேன்...*
நான் நழுவவிட்ட நாட்கள் - என்
தள்ளாடும் பருவத்தில் உணர்த்தின...
அரும்பாய் வளர்ந்த பருவம் - களியாய்
கண்ணாடியின் முன்னின்று
தடவி பார்த்த நாட்கள்
மலர்ந்து நின்றன... - எனது
கண்களும் கண்ணாடி அணிந்த போது...*
சேரமுடியாமல் தவிக்கிறேன்
ஓட்டை பானையில் நினைவுகளை சேகரித்து...
பறித்தாய் மனதை சிரிப்பால்...
விடுதியில் பூட்டிய உள்ளத்தில் - இன்றும்
கேட்கிறது அழுகுறல் - எனது
சிறைச்சாலை மனதில்...*
விடியலில் வரைந்த கடிதங்களில்
சிதைந்து போன நினைவுகளாய்...*
மேகபார்வை சீற்றத்தில்
வீதியில் சிதையாத வீழ்படிவாய்...*
கன்னக்குழியில் சிறையுற்ற நினைவுகளில்
கைக்கு எட்டாத புதையலாய்...*
மவுனத்தோடு பேசிய கவிதைகளில்
வாழ்ந்து பார்த்த கனவுகளாய்...*
விதைத்த இடத்தில் புழுதிகளாய்
பள்ளி சீருடையில்
புதிரான உன் கண்ணாடி மனதில்
கவிழ்ந்து நோக்கும் கருப்புநிறமாய்...
உனக்காக காத்து நின்றேன்...*
No comments:
Post a Comment
Do U Like This...