Tuesday, February 22, 2011

Mahatma Kanthi - கரன்சி பிடியில் காந்தி

                                                
                                                             
கரன்சி பிடியில் காந்தி

தோற்றுபோன வரலாறால்
துவண்டுபோன இதயங்கள்
தடம் மாறிய மனிதர்களால்
சிதைவுற்ற சித்திரங்கள்...*


நானிலங்கள் வரண்டதால்
நரைத்து போன முடிகள்
நலிந்து போன உறவுகளால்
நடை பாதை தெரியா உள்ளங்கள்...*

உணவும் உடையும் இன்று
உடலை விலைக்கு வாங்கியது

வறுமையில் சிக்கிய புயலாய்
வரண்டு போய் அலைகிறேன்

வீணாய் கிடந்த வானத்தில்
சிதைந்து கிடந்த மேகங்களாய்
விடைதெரியாது... 

வீணற்று கிடக்கிறேன்...*

விரிசலுற்ற சாலையில்
பிளவுற்ற வேர்களின் துடிப்புகள்
வாடிய இலைகளாய் இளைஞர்கள் - இன்றும்
செயற்கை சுவரொட்டிகளாய்...*


நாம் சிந்திய கண்ணீர்துளிகளில்
வளர்ந்த மரம் ஒன்று
உதிர்த்து விட்ட பூக்கள்... - வாடிய
சருகுகளாய் கலைந்து கிடந்தன
ஊடுருவிய காலநிலையால்...*


விற்றுபோன  மனிதநேயத்தில்
மறைந்த சுதந்திர தாகங்கள்...
ஏலம்விடப்பட்ட நாட்டில்
காந்தி புன்னகையும் விலைக்கு வந்தது...*


விடைதெரியாது எழுதிய காகிதத்தில்
வீணடித்த காலத்தின் சுவடுகள்...
வியர்வையில் புரளும் உதிரத்தில்
விளைந்த கரன்சியில்
காந்தியின் கண்ணீர் துளிகள்...
புரிந்தது எனக்கு
கரன்சி பிடியில் காந்தி...*


விடை கொடு நாடே
விடுப்பு காந்திக்கு மட்டுமல்ல...
என் மக்களுக்கும் தான்...*

No comments:

Post a Comment

Do U Like This...