Tuesday, February 22, 2011

College Life - கல்லூரி நாட்கள்



 கல்லூரி நாட்கள்

உனக்காக காத்து நிற்கிறேன்
உடைந்து போன பாதையில்
பதிவுகள் மெய்யாகி போகுமோ
படைப்புகளாய் மாறி போகையில்...*

ஓரப்பார்வையின் சாரலில்
விளைந்த காதலின் சுவடுகள்...
பருவம் பார்த்து வீசிய புயலாய் பாடங்கள்
காதில் வாங்காமல் தீட்டிய
வெள்ளை காகிதம் கூறிடுமோ - எனது
இருக்கையின் கதையை...*


கோடைக்கால வானில்
வீசும் தென்றலாய்...
மிக அருகினில் நீ இருந்தும்
தூரமாய் தோன்றியது...*

பார்க்காத காதுகள் உணருமா
கேட்காத கண்களை பார்த்து...- உன்
வழிபார்த்து நடக்கும் கால்கள்...*


நிலம் பார்த்து விழ மழையா நான்
தாகம் தீரா பூமி போல் தவிக்க...*

வளைந்து கொடுக்க நதியா நான்
முதுகெலும்பில்லா நீர் போல் வாழ...*

வீணற்று கிடக்க காற்றா நான்
விளைச்சலில்லா காணலாய் கலைய...*


என்னை விட்டு உன் நினைவை கேட்கிறாய்...
உள்ளம் சிதைந்தது...
கண்ணைவிட்டு பிரியா இமைகளை பிரிக்கிறhய்...
கண்கள் நனைந்தது...*

நீ தள்ளி விட்டு போன முள்ளாய்
சிதறிப்போன நாட்கள்...*

உள்ளத்தின் தேடல்
உன் பிழையான விழிகளில்...

வீணற்று தான் போகிறேன் மழையாய்
கடலில் விழுகையில்...*
 

உனைவிட்டு பிரிந்து சென்ற பாதையில்
மடியில் விழுந்து கசங்கின மயானப்பூக்கள்...
என்றும் உன் நினைவில் நண்பா...!

Love Leter - காதல் கடிதம்


                                                                                                
காதல் கடிதம்

விரைவில் நகரும் நாட்கள்
உனை காணத் துடிக்குதே...
உயிர் பூக்குதே - சட்டென்று
பார்த்த சூரியன் போல் உன்னால்...*


உனை நினைத்து ஒன்று
எழுதி வைத்தேன் - நீ வரும்
வழியில் தினமும் சிலையாய் நின்றேன்...
ஒரு பார்வைதானே பார்த்துச் சென்றாய் - என்
கவிதை காகிதம் நனைத்து விட்டாய்...*


சந்திப்போமா தனிமையில்
இரவில் ஒருமுறை...
பூமியே பரவசப்படும் - இரவில்
வானவில் தோன்றியதென்று...*


உனை சேரும் நாட்களை
எண்ண தொடங்கி விட்டேன்...* - இன்றும்
என் கண்கள் முட்களாய்
உனை பின் தொடர்கிறது...

காதல் கடிதத்துடன்...!

LOVE - காதல் மலர்ந்தது


                                                                                
காதல் மலர்ந்தது...!

வாசம் தீரா பூவைப்போல்
எனக்குள் நீ...*
தாகம் தீரா மண்ணைப் போல்
எனக்குள் நீ...*
மோகம் இல்லா காற்றைப் போல்
எனக்குள் நீ...*

உனைப்பார்க்க நிமிடம் ஒன்றை ஒதுக்கி
நாட்களை கழித்து சென்றேன்...
காதல் எந்த நிமிடம் உதித்தது
இன்றும் உணரவில்லை நான்...!

Heart Sale - சலசலப்பு

                                                    
                                                                 
சலசலப்பு

நான் வழிகள் நடுவே
பாதை படைப்பாளிபோல்...*
கூவி கூவி விற்றேன்
என் மனதை...*

School Life - பள்ளி பருவங்கள்


                                                                          
பள்ளி பருவங்கள்...!

நான் சீருடை காலத்தில்
வால் முளைத்து திரிந்தவன் தான்
நான் தாவி தாவி அலைந்தது
உன் மனதில் தான்...*


நடைபயண தூர பள்ளியில்
உடைந்த பாதையில் 

கண்கள் அலைபாய...
கால்கள் இடறலாய் சென்றேன்...*


பதிந்து போன கண்ணாடி மனதில்
வெள்ளை பூச்சில் - பருவத்தில் 

தயங்கி வெளிவரும்
மெலிதான புன்னகையோடு
இரட்டை ஜடையில் நீ - இன்றும்
வலம் வந்து கொண்டுதான் உள்ளாய்

என் மனதில்...*

பள்ளி பருவத்தில் இருந்தபோது நீ...*
பள்ளி ஆசிரியராய் இன்று நான்...*

Waiting For You - உனக்காக காத்து நின்றேன்



உனக்காக காத்து நின்றேன்...!

நான் வரைந்ததில்
தவறிய வரிகள் - வீழந்தன
உன் புன்னகையில்...*



மறைத்து வைத்த பொக்கிஷம்(ஆசைகள்) நான்
உனக்காக... - இன்றும்
மவுனமாய் ஆலமரத்தடியில்...*



நான் சேகரித்தது - உன்
நினைவுகளும், கையெழுத்தும் தான்
அதனால் தான் என்னவோ - இன்றும்
உன் நினைவுகளை கிறுக்கி கொண்டே உள்ளேன்...*



நான் நழுவவிட்ட நாட்கள் - என்
தள்ளாடும் பருவத்தில் உணர்த்தின...
அரும்பாய் வளர்ந்த பருவம் - களியாய்
கண்ணாடியின் முன்னின்று
தடவி பார்த்த நாட்கள்
மலர்ந்து நின்றன... - எனது
கண்களும் கண்ணாடி அணிந்த போது...*


சேரமுடியாமல் தவிக்கிறேன்
ஓட்டை பானையில் நினைவுகளை சேகரித்து...

பறித்தாய் மனதை சிரிப்பால்...
விடுதியில் பூட்டிய உள்ளத்தில் - இன்றும்
கேட்கிறது அழுகுறல் - எனது
சிறைச்சாலை மனதில்...*


விடியலில் வரைந்த கடிதங்களில்
சிதைந்து போன நினைவுகளாய்...*

மேகபார்வை சீற்றத்தில்
வீதியில் சிதையாத வீழ்படிவாய்...*

கன்னக்குழியில் சிறையுற்ற நினைவுகளில்
கைக்கு எட்டாத புதையலாய்...*

மவுனத்தோடு பேசிய கவிதைகளில்
வாழ்ந்து பார்த்த கனவுகளாய்...*


விதைத்த இடத்தில் புழுதிகளாய்
பள்ளி சீருடையில்

புதிரான உன் கண்ணாடி மனதில்
கவிழ்ந்து நோக்கும் கருப்புநிறமாய்...
உனக்காக காத்து நின்றேன்...*

Dark Nights - நான் மட்டும் இருளாய்


                                                                          
நான் மட்டும் இருளாய்...!

நீ மற்றொரு நிழலில் தஞ்சம் புகையில்
என் ரகசிய கனவுகள் மவுனமாகின - எனது
நிழல் மட்டும் எனைவிட்டு பிரிந்தது
நினைவை மட்டும் தூவினேன் - உனை
ஆசிர்வதித்த பூக்களாய்...*

 
நீ விலகிபோகும் போதெல்லாம்
தொடர்ந்து வருகிறேன்
உன் நிழலை போல...
புரிந்தது எனக்கு - உனது 

பார்வையில் விழுந்தேன் - என்றும்
நான் மட்டும் இருளாய்...*

Mahatma Kanthi - கரன்சி பிடியில் காந்தி

                                                
                                                             
கரன்சி பிடியில் காந்தி

தோற்றுபோன வரலாறால்
துவண்டுபோன இதயங்கள்
தடம் மாறிய மனிதர்களால்
சிதைவுற்ற சித்திரங்கள்...*


நானிலங்கள் வரண்டதால்
நரைத்து போன முடிகள்
நலிந்து போன உறவுகளால்
நடை பாதை தெரியா உள்ளங்கள்...*

உணவும் உடையும் இன்று
உடலை விலைக்கு வாங்கியது

வறுமையில் சிக்கிய புயலாய்
வரண்டு போய் அலைகிறேன்

வீணாய் கிடந்த வானத்தில்
சிதைந்து கிடந்த மேகங்களாய்
விடைதெரியாது... 

வீணற்று கிடக்கிறேன்...*

விரிசலுற்ற சாலையில்
பிளவுற்ற வேர்களின் துடிப்புகள்
வாடிய இலைகளாய் இளைஞர்கள் - இன்றும்
செயற்கை சுவரொட்டிகளாய்...*


நாம் சிந்திய கண்ணீர்துளிகளில்
வளர்ந்த மரம் ஒன்று
உதிர்த்து விட்ட பூக்கள்... - வாடிய
சருகுகளாய் கலைந்து கிடந்தன
ஊடுருவிய காலநிலையால்...*


விற்றுபோன  மனிதநேயத்தில்
மறைந்த சுதந்திர தாகங்கள்...
ஏலம்விடப்பட்ட நாட்டில்
காந்தி புன்னகையும் விலைக்கு வந்தது...*


விடைதெரியாது எழுதிய காகிதத்தில்
வீணடித்த காலத்தின் சுவடுகள்...
வியர்வையில் புரளும் உதிரத்தில்
விளைந்த கரன்சியில்
காந்தியின் கண்ணீர் துளிகள்...
புரிந்தது எனக்கு
கரன்சி பிடியில் காந்தி...*


விடை கொடு நாடே
விடுப்பு காந்திக்கு மட்டுமல்ல...
என் மக்களுக்கும் தான்...*

Beggers Life - தானத்திற்காகவும் தர்மத்திற்காகவும்


சிதறிய சில்லறையின் சினுங்கலில்
சிக்குண்டு தவித்தன - பல 

கோவிலின் மணியோசைகள்...
தானத்திற்காகவும்... 

தர்மத்திற்காகவும்...*

Lost Life - இறுதி ஊர்வலம்

                        
                                                                                
இறுதி ஊர்வலம்

இரவு நேரவெளியில்
பயணித்தபோது
கண்கள் திறந்தே இருந்தது...
சேரமான பூச்சிகள்
கண்ணாடியை தட்டிசெல்ல
விரைந்து சென்றது புகைவண்டி - எனது
கடின மனதுடன்...*


வெள்ளை சட்டை அணிந்து
மாலை அணிவித்து அமரவைத்தார்கள்...
வழிநடுவே புறக்காளை காண்பித்து - பாட்டிகதை 

சொல்லியே காதுகளை தைக்க - மறுபுறம் 
ஓர் ஆறுதலான கை தோளின் மீது...*

வீதி எங்கும் மணம் வீச
பன்னீரால் உடல் நனைத்தது...
பூப்பந்தலோடு கட்டிய தோரணம்
அமைதியான இருக்கையில்
தனியொரு இடம் - உடன்
ஆர்ப்பரிக்கும் வாத்தியங்களுடன்...*


வாசமுல்லை ஜாதிபூ மூக்கினுள் வீச
பல பூக்களை உதரவிட்டும்
சென்று கொண்டிருந்தது
வாழ்க்கை பயணம் - இல்லை
இது என் இறுதிப்பயணம்...!

Travelling Life - பயணம்

                                                 
                                                                        
பயணம்

நான் சந்தித்த நபரெல்லாம்
நகல்களாய் மாறி நிழலாய் எனை துரத்த
நாட்கள் நடைபயணத்திலே கழிந்தது...*


களியில் ஆடிய பொம்மையாய்...
சிலந்திபோல் நூலில் தொங்க...
முன்னோக்கியும், பின்னோக்கியும்
சென்ற கனங்கள் போல்...
உன் மூச்சு காற்று உரசிசெல்கின்றன...*

I am GOD - நான் கடவுள்


நான் கடவுள்...!


விடை தெரியாது எழுதிய காகிதத்தில்
வீணடித்த காலத்தின் சுவடுகள்...
வரண்ட கானி நிலத்தின் காசோலையை
கோனியில் சுமந்து - எனது விதியை
மண்ணில் விதைத்தேன்...
வினையின் விளைச்சல் வீதியில் தெரிந்தது...
புரிந்தது எனக்கு
நான் தான் கடவுள் என்று...*

Love Rain - மேக மோகம்

      
மேக-மோகம்...*

நீ திசையறியா பறவையாய் பறந்து செல்ல
நான் கருமேகமாய் சுழ்ந்து நிற்க 
உன் கருவிழிமையினால் 
என் பார்வையை இருட்டாக்கினாய்...*

நீ மோதும் போதெல்லாம் சிவந்தன விழிகள் - என் 

பார்வைதுளிகள் முழுவதும் உனைநனைக்க
சிலிர்த்தது உன் உடல்
கலைந்தது என் மே(மோ)கம்...*

Sculpture man - சிலை மனிதன்


                                                                                     
சிலை மனிதன்...!


உன்மேல் காதலில் விழுந்து - நான்
சிந்தும் உதிரங்களில் - உன்
அழைப்பொலியே கேட்க...*
என் மீது விழும் ஒவ்வொரு அடிக்கும் - நீ
பதில் சொல்ல வேண்டும்...
நிதம் கடினமாக்கிய - உன்
மோகப்பார்வையில்...
நான் இன்றும் சிலையாய் நிற்கிறேன்
உனை பார்த்த இடத்தில்...*

Love Prisoner - காதல் கைதி

                                                     
                                                                 

நீ மெலிந்து போனதால்
கன்னகுழிகள் வரண்டதா...
உனை சுமந்து செல்வதால் - என்
இதயம் துடிக்க மறக்குதா...
வசந்த கால இரவுகள்
வளை ஓசையின்றி செல்வதா...
நான் தேயவா
உனைபோல் பிறையாய்...
நான் வாழவா
உனக்குள் ஒரு கைதியாய்...*

St.Peter's Engineering College (2011 - B.Tech chemical engineering batch)

St.Peters Engineering College, Avadi.

Chemical Engineering (2011 Batch)


Reaction - 2010