இரயில் பயணங்களில்...
மரப்பலகை இருக்கையில்
இருகிய இரு உள்ளங்கள்...
துடிப்பின் வேகமாய்
தடக் தடக் ஓசை ஒலிக்க
நினைவுகளை கடந்து சென்றது
சன்னலோர மரங்கள்...*
நாங்கள் கடந்து வந்த பாதைகள்
பின்னோக்கி செல்ல... - அவள்
பேசும் வார்த்தைகள் முன்னோக்கி சென்றது...*
ரயில் பயணகாட்சிகளை
வேடிக்கையாய் அவள் ரசித்தாள்...
கண்களில் சலனமில்லாமல் - நான்
அதைபார்த்து சிரித்தேன்...*
ஒவ்வொரு நிமிடத்திலும்
மோகத்தென்றல்
அவள் துப்பட்டாவை துடைத்தெடுக்க...
தாழ்பாளிட்டால்
தென்றலை மட்டுமல்ல - என்
அலைபாயும் மனதையும் சேர்த்துதான்...*
ரயிலின் தடக் தடக் ஒலியை
ரசித்தவளுக்கு புரியவில்லை - எனது
இதயம் பதக் பதக் என துடித்ததை...*
காதலிக்க நேரமில்லை என்பதை
கடிகார முட்களில் புரிந்தேன்...
புரியாத புதிராய் இருந்தது - நான்
அந்த காலத்தை கடக்கிறேன் என்று...*
விடாமல் ஒலித்த
தடக் தடக் ஒலியில்
அவள் முகபாவனைகளை
சிதறாமல் படமெடுத்தேன்...
நகல் அனைத்தும் எனைக்காட்டின
காந்த பார்வையில் சிக்கியது நான்தானே...
பத்திரமாய் பதிவுகளை வைத்துள்ளேன்
இன்னும் இருட்டினுள்...*
பலகையில் நாம் கிறுக்கிய
கிளிஞ்சல்கள்... - நான்
காது கேளாதவனாய்
பார்வை இல்லாதவனாய்
உன்னுடன் சென்ற ரயில் பயணத்தை
ஜடமாய் சித்தரிக்கின்றன... ஓவியமாய்...*
மேகத்தில் இரு வானவில்லாய்...
கூடாத இரு தடங்கள்
காதலால் இணைந்து சென்றது - ரயில்போல...*
வேகமும் துடிப்பும் இதமாய் இருந்தது
நீ என் தோள்சாய்ந்து பேசுகையில்...
அணையா விளக்காய்
காதலின் தீபத்தை ஏற்றினேன்...
பிரிவின் ஒவ்வொரு நிமிடத்தையும்
காலன் ரயில் ஓசையாய் கூவினான்...*
அடையும் இடம் வந்துவிட்டது - என்
அழியா நினைவுகளோடு...
இது ஒரு தொடர்கதை பாடலோடு
நிலையம் எங்களை வரவேற்றது...
எடுத்துவைக்கும் மூட்டைகளோடு
எங்களது பயணத்தின் உறவுகளை
முதுகில் கட்டிகொண்டே
கடந்து செல்ல தயாரானோம்...*
காலத்தை வென்ற - அவளின்
சிறிய புன்னகை
இரவின் பயணங்களை நிறைவுபடுத்தியது...
சில நிமிடங்கள் பதைத்துவிட்டேன்
பேசுவதை நிருத்தி விட்டேன்
கண்களை மூடிக்கொண்டேன்
தடம்புரண்டன ஞாபகங்கள்
என்னவளையும் சேர்த்து...*
திடீரென விழித்துகொண்டேன்
பிரிவை நினைத்து கண்கள் துளிர்த்தது
மனமோ தடக்தடக் என தவித்தது...*
வாசல் கதவில் நின்றுகொண்டு
பார்க்கலாமென - அவள்
ஓரப்பார்வையில் சொல்கையில்...
நின்று துடித்தது இதயமட்டுமல்ல
நமது ரயில் பயணமும் தான்...
புரிந்தது எனக்கு
பயணங்கள் முடிவதில்லை...*
-ஜோ. பிரிட்டோ ராஜ்
மரப்பலகை இருக்கையில்
இருகிய இரு உள்ளங்கள்...
துடிப்பின் வேகமாய்
தடக் தடக் ஓசை ஒலிக்க
நினைவுகளை கடந்து சென்றது
சன்னலோர மரங்கள்...*
நாங்கள் கடந்து வந்த பாதைகள்
பின்னோக்கி செல்ல... - அவள்
பேசும் வார்த்தைகள் முன்னோக்கி சென்றது...*
ரயில் பயணகாட்சிகளை
வேடிக்கையாய் அவள் ரசித்தாள்...
கண்களில் சலனமில்லாமல் - நான்
அதைபார்த்து சிரித்தேன்...*
ஒவ்வொரு நிமிடத்திலும்
மோகத்தென்றல்
அவள் துப்பட்டாவை துடைத்தெடுக்க...
தாழ்பாளிட்டால்
தென்றலை மட்டுமல்ல - என்
அலைபாயும் மனதையும் சேர்த்துதான்...*
ரயிலின் தடக் தடக் ஒலியை
ரசித்தவளுக்கு புரியவில்லை - எனது
இதயம் பதக் பதக் என துடித்ததை...*
காதலிக்க நேரமில்லை என்பதை
கடிகார முட்களில் புரிந்தேன்...
புரியாத புதிராய் இருந்தது - நான்
அந்த காலத்தை கடக்கிறேன் என்று...*
விடாமல் ஒலித்த
தடக் தடக் ஒலியில்
அவள் முகபாவனைகளை
சிதறாமல் படமெடுத்தேன்...
நகல் அனைத்தும் எனைக்காட்டின
காந்த பார்வையில் சிக்கியது நான்தானே...
பத்திரமாய் பதிவுகளை வைத்துள்ளேன்
இன்னும் இருட்டினுள்...*
பலகையில் நாம் கிறுக்கிய
கிளிஞ்சல்கள்... - நான்
காது கேளாதவனாய்
பார்வை இல்லாதவனாய்
உன்னுடன் சென்ற ரயில் பயணத்தை
ஜடமாய் சித்தரிக்கின்றன... ஓவியமாய்...*
மேகத்தில் இரு வானவில்லாய்...
கூடாத இரு தடங்கள்
காதலால் இணைந்து சென்றது - ரயில்போல...*
வேகமும் துடிப்பும் இதமாய் இருந்தது
நீ என் தோள்சாய்ந்து பேசுகையில்...
அணையா விளக்காய்
காதலின் தீபத்தை ஏற்றினேன்...
பிரிவின் ஒவ்வொரு நிமிடத்தையும்
காலன் ரயில் ஓசையாய் கூவினான்...*
அடையும் இடம் வந்துவிட்டது - என்
அழியா நினைவுகளோடு...
இது ஒரு தொடர்கதை பாடலோடு
நிலையம் எங்களை வரவேற்றது...
எடுத்துவைக்கும் மூட்டைகளோடு
எங்களது பயணத்தின் உறவுகளை
முதுகில் கட்டிகொண்டே
கடந்து செல்ல தயாரானோம்...*
காலத்தை வென்ற - அவளின்
சிறிய புன்னகை
இரவின் பயணங்களை நிறைவுபடுத்தியது...
சில நிமிடங்கள் பதைத்துவிட்டேன்
பேசுவதை நிருத்தி விட்டேன்
கண்களை மூடிக்கொண்டேன்
தடம்புரண்டன ஞாபகங்கள்
என்னவளையும் சேர்த்து...*
திடீரென விழித்துகொண்டேன்
பிரிவை நினைத்து கண்கள் துளிர்த்தது
மனமோ தடக்தடக் என தவித்தது...*
வாசல் கதவில் நின்றுகொண்டு
பார்க்கலாமென - அவள்
ஓரப்பார்வையில் சொல்கையில்...
நின்று துடித்தது இதயமட்டுமல்ல
நமது ரயில் பயணமும் தான்...
புரிந்தது எனக்கு
பயணங்கள் முடிவதில்லை...*
-ஜோ. பிரிட்டோ ராஜ்