நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற - இந்த
நாட்டிலுள்ள மாணவர்களின் வாழ்வு முன்னேற...
என்றும் நல்லவங்க எந்நாளும் உங்க பின்னாலே - நீங்க
நினைச்சதெல்லாம் நடக்கும் உங்க கண்ணுமுன்னாலே..!
படிக்கும் மாணவர்களே ஒன்றுகூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்...
மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண
என்னவழி என்று எண்ணி பாருங்கள்...
ஆசிரியர் சொன்னவழி சென்று நன்மை தேடுங்கள்...!
நாம் பாடுபட்டு படித்ததை கற்பிக்கும்போது இன்பம் - வரும்
மாணவர்கள் எதிர்காலத்தை காணும்போது இன்பம்...
பொருளாசையாலே படிக்கும் படிப்பு சுயநலத்தின் பிள்ளை
சுயநலமே இருக்கும் நெஞ்சில் அமைதி என்றுமில்லை...!
நதியைப்போல நாமும் நடந்து பலன் தரவேண்டும்
கடலைபோலே விரிந்த இதயம் இருந்திடவேண்டும்...
வானம்போல ஆசான் சொன்னதை போதித்திடவேண்டும் - நாம்
வாழும் வாழ்க்கை உலகில் என்றும் நிலைத்திடவேண்டும்...!
No comments:
Post a Comment
Do U Like This...