Sunday, September 25, 2016

கட்சிசார் கொள்கைகள் மற்றும் போராட்டங்கள் தேவையா???

ஊர்ல பத்து பத்துபேரா, பத்து அரசியல் கட்சிகளை பின்பற்றும்போது, எங்கிருந்து ஒற்றுமையான கருத்துக்கள் கிடைக்கும்..!

ஒருத்தன் மாவட்ட கட்சி
ஒருத்தன் மாநில கட்சி
ஒருத்தன் தேசிய கட்சி
மற்றவன் அன்னாடங்காட்சி..!

எங்கையோ இருக்கிற அரசியல் தலைமைகள் சொல்றது நம்ம காதுக்கு கேக்குது, பக்கத்துல இருக்கிறவன் கூக்குரல் மட்டும் கேக்கவே மாட்டேங்குது..!

என் கட்சி தலைவர் சொன்னால்தான் போராட்டத்தில் இறங்குவேணு ஒருத்தன்.. என் கட்சி தலைவருக்கு இந்த போராட்டத்தில் ஈடுபாடில்லை, நாங்கள் பங்கேற்கமாட்டோம்னு இன்னொருத்தன்...!

கடைசியில போராட்டத்திற்கு ஆள் சேர்க்க நடிகர்களையும், நடிகைகளையும் காலை பிடித்துகொண்டு அலைவது...!

எவ்வாறு ஆங்கிலேயன் நம்மை ஓன்று சேரவிடாமல் தடுத்தானோ, அதேத்தான் இப்பொழுதும் கட்சிகள் பெயரில் நடக்கிறது...!

மதசார்பு
இனசார்பு
மொழிசார்பு
இதைவிட கொடியது
கட்சிசார் கொள்கைகள் மற்றும் போராட்டங்கள்..!

உனக்காக மற்றும் உன் சமூகத்துக்காக போராடும்போது, எந்த கட்சி கொள்கைகளும் தேவையில்லை என்று எப்பொழுது முன்வருகிறாயோ, அன்றுதான் விடியலும் உண்டு, மாற்றமும் உண்டு...!

இல்லையெனில்..
நாளை நீ தெருவில் கிடந்தால், உனது உயிர் பந்தங்களாகக இருந்தாலும், அடுத்த கட்சிக்காரன் என்று உதறித்தள்ளிவிடுவார்கள் ஜாக்கிரதை...!!!

No comments:

Post a Comment

Do U Like This...