Sunday, October 30, 2016

தந்தாய் உந்தனின் ஆசீர் (Thanthaay Unthanin Aaseer) - விசுவாசிகள் மன்றாட்டு



தந்தாய் உந்தனின் ஆசீர்
எம்மில் தங்கிடுக!

திருத்தந்தை ஆயர்கள் குருக்களும்
கன்னியர் துறவியர் யாவரும்
உடல் உள்ள நலன்கள் பெற்றிட
உமது அருளும் தா...* - தந்தாய்

இந்நாட்டு மன்னர்கள் அமைச்சர்கள்
எம் நாட்டு ஆட்சியர் மக்களும்
அன்பைப் பொழிந்து உறவில் வளர
வரங்கள் பலவும் தா...* - தந்தாய்

இறைமக்கள் நாங்கள் யாவரும்
விசுவாசம் கொண்டு வாழவும்
ஆன்மீக வாழ்வில் மேலும் சிறக்க
இறையே அருளும் தா...* - தந்தாய்

இன்றைய விழாவை சிறப்பிக்கும்
இளைஞர்கள் குடும்பங்கள் யாவரும்
வேண்டும் வரங்கள் பெற்று மகிழ
ஆசீரும் அருளும் தா...* - தந்தாய்

பலியின் பங்காளர் யாவரும்
அவர்கள் குடும்பத்தின் அனைவரின்
கவலை கஷ்டங்கள் தீர்ந்திடவும்
நலன்கள் பலவும் தா...* - தந்தாய்

இறந்த ஆன்மாக்கள் அனைத்தையும்
யாரும் நினையா ஆன்மாவையும்
உமது வான் வீட்டில் சேர்த்திடவும்
நித்திய இளைப்பாற்றி தா....* - தந்தாய்

Wednesday, October 19, 2016

நடுநிலையாளர்களா நாம் (Fake Generalist)



அவன் மட்டும் தாண்டா கெட்டவன்
மற்றவன் எல்லாரும் நல்லவர்கள்தான்...
நான் எல்லாரையும் குறைசொல்லல
அவன் சேர்க்கையும் சரியா இருக்கணும்லா..
எதுக்காக சொல்றேனா, அவங்க இருக்கிற இடம் அப்படி..

பழகும் நண்பர்கள்
பழகிய நண்பர்கள்
பழகப்போகும் நண்பர்கள் பற்றி பேசுகையில்
நாமும் இப்படித்தான் இருக்கிறோமா???

சில பட்டும்படாமல் பேசும் வார்த்தைகள்கூட, ஏதோ ஒருவிதத்தில் ஒருவரையோ (அ) ஒருசமூகத்தையோ பாதித்து கொண்டேதான் உள்ளது...

இதில் யோசிக்கவேண்டியது என்னவெனில்..
மற்றவரை குற்றபடுத்த நினைத்தால்,
நாம் நடுநிலையாளனாக மாறிவிடுகிறோம் என்பதே உண்மை...!!

-J. Britto Raj...*

Monday, October 17, 2016

நான் எதிர்பார்க்கிறேன் (Lover Expectation in Dream, After 100 years)


நான் எதிர்பார்க்கிறேன்
வெளிச்சம் அணைந்த சமயத்தில்
கண்கள் உதவவில்லை
கைகளும் கால்களும்
தடம் தேடுகின்றன...*

தனியே விட்டுவிட்டாய் - என்
இதய ஓசை அதிகரிக்கிறது
எனக்குள் ஆயிரம்
வினாக்களை எழுப்புகிறது...*

யாரோ என் பக்கத்தில்
நகர்வதை உணர்கிறேன்...
நகரும் ஒவ்வொரு அடியும்
பள்ளம் மேடுகள் இருக்கினவா - என
பயத்தால் உளறுகிறேன்...*

யாரும் என்னை
இப்படி செய்ததில்லை
இருளின் வாசம்
பயத்தை கொடுக்கிறது
இதயமும் இருண்டுவிட்டது...*

என்னுடைய நிழலுக்கு
இங்கு வேலையில்லை
அதனால் ஏனோ பிரிந்துவிட்டாய்
நான் இருளையா விரும்பினேன்
அதன் பிம்பத்தையா ரசித்தேன்...*

இப்பொழுதெல்லாம்
நான் கனவில் வாழ்கிறேனா
நட்சத்திரங்கள் எங்கே
ஒரு நூறு வருடங்கள்
கடந்து வந்துவிட்டேனோ
நீயில்லாமல்...*

நான் எதிர்பார்க்கிறேன்
தனிமையில் - ஒரு
நூருவருடங்களை தாண்டி..*
- J. Britto Raj***

Saturday, October 15, 2016

என்று நாம் சந்தித்தோம் (Meeting Lover for the FIRST TIME)


என்று நாம் சந்தித்தோம்
உறைந்துபோன சுவாசங்களில்
இருகிகொண்டன இதயங்கள்
உன் பதிவுகளால்...!
 
கடந்த கால
கனவுகள், சத்தியங்கள் - மற்றும்
எனது தைரியங்கள்
எப்படி உடைந்து போயின.. - நீ
தனிமையில் நின்றதை பார்த்தபொழுது...!

எப்படி
எல்லா குழப்பங்களும், தடைகளும்
மறைந்து போயின
உன்னை நோக்கி வரும்பொழுது...!

உனக்காகத்தான் இருந்தேனா
இத்தனை நாட்கள்...
பயப்படாதே
உன்னை நெருங்கிவருகிறேன்
என்னை உன்னில் உணர்கிறேன்...!

என்னுடைய நம்பிக்கைகள்
உன்னை சந்திக்கவைத்தது
என் இதயமும் - இது
உண்மை என்கிறது...!

எனது காத்திருப்பு அர்த்தமானது
உனது அருகாமையில்
நாம் இருவரும் பயணித்த
பூர்வஜென்ம வாழ்க்கையை
உணரும்பொழுது...!!!

என்று நாம் சந்தித்தோம்
J. Britto Raj...*

Wednesday, October 5, 2016

மொழிகளும்... அரசியலும்.. (Language and Politics)

மொழிகளும்...! அரசியலும்...!

ஐந்தறிவு கொண்டவனுக்கு பொதுமொழி
ஆறறிவு கொண்டவனுக்கு ஆயிரம் மொழி

ஊர்ல இருந்தால் மொழி எதிர்ப்பு போராட்டாம்..
வெளியூர் வந்தால் மொழி பேசமுடியாமல் திண்டாட்டம்...!

பானிபூரி-க்காரனிடமும்
குல்பிக்காரனிடமும் கேட்ட மொழி - இன்று
Gulf முழுவதும் பரவிகிடக்கின்றது...!

என்ன செய்ய
வேலைன்னு வந்துட்டா மட்டும் 

வெள்ளைக்காரனாகவும்
ஹிந்திக்காரனாகவும்
மலையாளியாகவும் மாறிவிடுகிறோம்...!

வெளியூர் தொழிலாளர்கள் மட்டுமா - இங்கு
தமிழ் ஆர்வலர்கள் எனதிரிபவர்கள்
திரைப்படங்களாகவும், புத்தகங்களாகவும்
அவர்களது படைப்புகளை பிற மொழிகளில்
மொழிபெயர்த்துகொண்டுதான் உள்ளார்கள் - இது 

மொழிபற்றா இல்லை வியாபர நோக்கமா...!

ஒரு மொழி இன்னொரு மொழியை அழிக்கும்
என்பதும் ஒரு வியாபர ஆதாயமே - என்று
வெள்ளைக்காரன் காலடி எடுத்து வைத்தானோ அன்றே
தனிமொழி என்பது அழிந்துவிட்டது...
தனிமொழி என கொடிபிடிப்பவர்கள் - ஏன்
தனிநாடு வேண்டுமென கொடி ஏந்தவில்லை...!

உலகளாவிய விசயங்கள் தெரிய ஆங்கிலம் வேண்டும்
உள்நாட்டு நடப்புகள் தெரிய மாற்றுமொழி வேண்டாம்..
ஆதாயம் வேண்டுமெனில் அடுத்தமொழி வேண்டும்
அரசியல் புரிந்துகொள்ள அடுத்தமொழி வேண்டாம்...!

மொழிகளை மூடைகளில் கட்டிக்கொண்டு
வெளியூர்களில் வியாபராம் செய்பவர்கள் - இங்கு
உள்ளூரில் அரசியல் செய்கிறார்கள்...
புரிந்தவர்கள்
பிறமொழிகளை கற்றுகொள்ளுங்கள்
தாய்மொழியை கற்றுகொடுங்கள்...!

Monday, October 3, 2016

கெட்டவர்கள் மனிதர்களாக வாழ்கின்றனர்..! (The Good Person)


ஒருவரின் நிறைசொல்ல
ஆயிரம் சந்தர்ப்பங்கள் வேண்டும் – ஆனால் 
அவரின் குறைசொல்ல 
ஒரு காரணம் போதும் - அன்றுமுதல் 
அவர் உங்கள் கண்களைவிட்டு மறையும்வரை 
குற்றவாளியாகத்தான் பார்க்கப்படுகிறார்...! 

அதனால்தான் என்னவோ 
இங்கு நல்லவர்களென முன்னிருத்தப்படுபவர்கள் 
அமரர்களாக உள்ளனர்... 
கெட்டவர்கள் என ஒதுக்கப்படுபவர்கள் 
மனிதர்களாக வாழ்கின்றனர்...!!!

தூக்கம் எனும் சதிக்கோட்பாடு (Sleeping Related Mysterious Thoughts)



தூக்கம் எனும் சதிக்கோட்பாடு...!

சூரியன் மறைவு
தூக்கத்தின் உதயம்...
பூமி தன்னைத்தானே சுற்றுவதற்கும்
இரவு பகலுக்கும் - நமது
தூக்கத்திற்கும் என்ன சம்பந்தம்...!

சூரிய படைப்புகள் பகலில் கண்விழிப்பும் 
இரவில் கண் அயர்வதும் ஏன்...
பகல் வேளைகளில் எட்டிப்பார்க்காத தூக்கங்கள்
இரவு மட்டும் குறட்டை விடுவது ஏன்...!

எல்லா படைப்புக்கும் முதன்மை சூரியன் என்றால்
இரவு மட்டும் எப்படி
தன்னிச்சையாக உருவாக்கப்பட்டது...
பகலை படைத்த கடவுள் ஏன்
இரவையும் சேர்த்து படைக்கவேண்டும்...!

ஆழ்ந்த உறக்கத்தில் நாம் எங்குதான் செல்கிறோம்
பகல் முழுவதும் விழித்திருந்தாலும் 
மரணம் அருகில் வருவதில்லை 
4 நாட்கள் தூக்கம் இழப்பின் 
அகால மரணம் எப்படி...!

நாளின் ஒவ்வொரு இரவும் 
நம்மை தூங்கவைப்பதே 
நமக்கான மறுநாள் கதையினை 
தொகுத்து எழுதுவதற்க்கா - இல்லை
இதுவும் அடிமைகளின் கோட்பாடா
காலை முழுவதும் உடலுக்கான போராட்டம்
இரவு முழுவதும் விடியலுக்கான உயிரூட்டம்...
எல்லா உயிரினங்களும் எப்படி
இந்த சதிகோட்பாடில் சிக்கியுள்ளன...!

பகலில் நடக்கும் ஒவ்வொரு காரியத்தையும்
இந்த மூளை புட்டுபுட்டு வைக்கிறது - அது
பல ஆண்டுகள் முன்னது என்றாலும் - ஆனால்
நேற்றைய கனவுகள் நியாபகம் இல்லாமல்
மறந்து செல்வது ஏன்...!

இரவுகள் ஒரு புதையல் 
தேடி கண்டெடுப்பது கடினம் - அதில்
தூக்கம் ஒரு வெல்ல இயலா சதிகோட்பாடு...
ஆழ்ந்த தூக்கத்தினை கண்டெடுக்கும் எவரும் 
அழியா உடலுடன் ஆயிரமாண்டுகள் வாழலாம் - இது 
மம்மிகளின் கோட்பாடுகள்...

நேர தாவலுக்கும் (Time Travel)
தூக்கத்திற்கும் ஏதோவகையில் சம்பந்தம் உள்ளது
இது மூளையின் இருண்ட மறுபக்கம்
என்பதே என் சதிகோட்பாடு...!