Saturday, August 19, 2017

ஆன்மீகதந்தையும் அருஞ்சுவை உணவகமும் (Walking With Special People)

ஆன்மீகதந்தையும் அருஞ்சுவை உணவகமும்

என்னா சூடு
என்னா சூடு – என
வடிவேலு பாணியில் கதறிய எனக்கு
கிடைத்தது அருட்தந்தையின் அலுவலகம்...!

அடித்து விரட்டவும் முடியாமல்
அமைதியாகபேசி அனுப்பவும் முடியாமல்...
புன்னகையா கோபமா - என இரண்டும்
கலந்த தோனியில் என்னைப்பார்க்க...!

புறப்பட்டுவிடுவாரோ என சுதாரித்துக்கொண்டு - ஊர்உலக
மொத்த கதைகளும் நியாபகம் வந்தவனாய்...
பேசி பேசியே காதை புண்ணாக்க – இவனிடம்
அடுத்த பிரசங்கம் செய்யவேண்டுமாயென
தலையை மட்டும் அசைத்துக்கொண்டிருந்தார்..!

நேரம் குறித்த அளவை தாண்ட
உங்களுக்கு பசிக்கவில்லையா என
குண்டைத் தூக்கிப்போட்டார்...
நான் பேசுறது போரடித்துவிட்டதோ – என
மனதில் நினைத்தவாறு...
வாங்க வெளியில்போய் சாப்பிடலாமே என்றேன்...
மறுபடியும் முதல்லயிருந்தா நினைத்திருப்பார்போல
சற்று யோசித்தபின் சம்மதம் வந்தது...!

இரவுகளோடு கூடிய இருவரின் பயணம்
தொடங்கியது முதல் முடிவுவரை – என்
வாய்ப்பேச்சுக்கு ஓய்வு கொடுக்கவில்லை...
இடை இடையில் என் பேச்சைநிப்பாட்ட
நாம சைவம் சாப்பிடலாமே
அசைவம் சாப்பிடுங்க அப்போதான்
என்னைப்போல் தெம்பாக நடப்பீர்கள் – என
நானும் விடாமல் காதைத்தைத்தேன்...!

உணவகம் வந்துவிட்டது
இங்கு செல்லாலாமே – என உணவு
கொடுத்தாவது வாயைமூடலாம் என்று நினைத்தார்...
ஹிந்தி பேசும் உணவகம் அது
அங்கு இங்கு சுத்திப்பார்த்தும்
சேட்டன்களைக் காணவில்லை - எனக்கு
தெரிந்த ஹிந்தியில் சாப்பாடு சொல்ல...!

1 பை 2 என சொன்னவரை
முழுசா சாப்பிடுங்க
மிச்சம் வந்தா பார்த்துக்கலாம் – ஏதோ
ஆசான் போல் சொல்லி முடித்து
சாப்பாடை திணிக்க... – ஏற்கனவே
இருந்த கால் வலியோடு – என்
வார்த்தைகளை கேட்ட காதுவலியோடு...
சாப்பிட்டுமுடிந்து திரும்பி நடக்கலானோம்...!

இந்த சூட்டுக்கு Fresh Juice குடித்தால்
ஆறாக ஓடும் வியர்வைக்கு அணைபோடலாமென
எனக்கு தெரிந்த எதுகைமோனையில் சொல்லிமுடிக்க..
வழியோரகடையில் அரைமணிநேரம் காக்கவைத்துவிட்டேன்
1 மணி நேரம் பிரசங்கம் செய்யும்போது வலிக்கவில்லை - இவன் தொல்லைக்கு அளவில்லையே என நினைத்திருப்பார்...!

எனக்கு பிடித்த அவகோடாவில்
சீனியும் ஐசும் அள்ளிபோட – எனக்கு
நாக்கு ஊறியது... – இந்த வயசுல
இவ்வளவு சீனியா என மிரண்டு போனார்...
நொறுங்க தின்றால் நூறு வயசு – என
அடிக்கிற சூட்டிற்கு ஐஸ் வைக்க...
வெந்த வேக்காட்டில் வெட்டிப்பேச்சோடு
குடித்தவாறே நடந்து வந்தோம்...!

ஆலய வாசலை அடையும்போது – நீ
எப்போதும் இப்படித்தானா என்று கேட்டவரிடம்...
வரும்போது என்ன கொண்டுவந்தோம்
போகும்போது என்ன கொண்டு போகிறோம்...
என சொன்ன என்னை உற்றுப்பார்த்துவிட்டு...
ஆள விடுடா சாமி – என
அவர் மனதில் நினைத்தது
என் காதில் ஒலித்தது...
கொஞ்சம் ஓவராகத் தான் பேசிட்டோமோ – என
நினைத்தவரே புன்னகையுடன் நடக்கலானேன்
மனதிலிருந்த வேதனைகளை மறந்து....!

இப்படித்தானோ...!
எல்லாவற்றையும் புன்முறுவலோடு ஏற்றுக்கொண்டு
நம்முடன் சேர்ந்து பயணிக்கிறார்கள்...
ஆன்மீக தந்தைகள் நமக்காக...!


-ஜோ. பிரிட்டோ ராஜ்

3 comments:

  1. Very Good one Britto. Simple but nice to SEE reading your words.

    ReplyDelete
  2. Britto!! நீ அவ்வளவு பேச மாட்டியே மக்கா!!
    அழகான எழுத்து! தொடர்ந்து நிறைய
    தினமும் எழுது! வாழ்த்துக்கள் பிரிட்டோ

    ReplyDelete

Do U Like This...