சுதந்திர இந்தியா
- 2017
நாடு வளம் கூடுதம்மா
நாம பட்டபாடு பலனாகுதம்மா...
சீமையிலே வாக்கப்பட்டு
சிங்காரமா
எழுதுரேம்மா...!
நாதியற்ற பூமியல்ல -
இங்கு
விதைச்சதெல்லாம்
பொன்னாகும்...
வாக்கரிசி போடவேண்டி
வண்டிமாடும்
ஏறுகூட்டும்...!
எட்டுதிக்கும் மண் வாசமுங்க
வரையடங்கா தேசமுங்க...
வரப்பு வெட்டி
பிரிச்சாலும்
வழிந்து ஓடும்
மனசுங்க...!
பச்ச மண்ணு
விளைஞ்சுப்போச்சு
பாட்டன் பூட்டன்
வேலியாச்சு – எங்கள்
பசி துக்கம் போக்கத்தானே
எத்தனை உயிர்கள் விதையாச்சு...!
எல்லையிலே நிக்குதுங்க
முன்னபின்ன தெரியாத
உசுருங்க...
குண்டு பட்டு வீழ்ந்திடாத – எங்க
நாட்டைக் காக்கும் அரணுங்க...!
நாலுவார்த்தை
படிச்சுப்புட்டேன் – நாட்டைப்பற்றி
நாக்கில் நரம்பின்றி
பேசிபுட்டேன்...
ரோசம் வந்து புதடி தட்ட
தண்டியாத்திரை போனவன்
தானே...!
கறைபடிந்த நாடுன்னு
நானும் நல்லா
கேட்டுபுட்டேன்...
என் கறையை அலசிப்போட
நல்ல காலம் பார்த்து
நின்றேன்...!
பெத்த மண்ணை கூறுபோட்டா
எந்தன் நரம்பும்
எரியுமுங்க...
பெத்த நாடை பழித்துரைக்க
இந்த ஜென்மம்
வேண்டாமுங்க...!
மொழிவாரி கூடுகட்டி
மதச்சாயம் பூசிப்புட்டு
கூட்டுக்குடும்ப வாழ்க்கை
வாழ்றோம்
இதுதானே சுதந்திரம்...!
எத்தனையோ அரசு வந்து
எந்தன் நாட்டை
சிதைத்தாலும்...
வரி மேல வட்டிபோட்டு
எம்மக்கள் வாழ்வை
வதைத்தாலும்...
உரிமை வேண்டி போராடுவோமே
எட்டப்ப வாழ்க்கை வாழமாட்டோமே...!
தந்திரத்தால் என்னையும்
நீ
மண்ணை கவ்வ வைக்கலாம் - அந்த
மண்ணாலே பாடம்புகட்ட
ஒன்று சேறும் கூட்டமடா...
அடிமைப்படுத்தி அரசாள
நினைத்தாலும்
அடங்கா மாருதட்டும் வீரனடா - எவனுக்கும்
தலைவணங்கா சுதந்திர
பூமியடா...
இதுதான் என் தேசமடா...
கர்வத்தோடு சொல்வேன் -
இது
என் இந்திய நாடடா...!
.
அனைவருக்கும் இனிய சுதந்திர
தின நல்வாழ்த்துக்கள்...!
- ஜோ. பிரிட்டோ
ராஜ்
No comments:
Post a Comment
Do U Like This...