Saturday, August 19, 2017

ஆன்மீகதந்தையும் அருஞ்சுவை உணவகமும் (Walking With Special People)

ஆன்மீகதந்தையும் அருஞ்சுவை உணவகமும்

என்னா சூடு
என்னா சூடு என
வடிவேலு பாணியில் கதறிய எனக்கு
கிடைத்தது அருட்தந்தையின் அலுவலகம்...!

அடித்து விரட்டவும் முடியாமல்
அமைதியாகபேசி அனுப்பவும் முடியாமல்...
புன்னகையா கோபமா - என இரண்டும்
கலந்த தோனியில் என்னைப்பார்க்க...!

புறப்பட்டுவிடுவாரோ என சுதாரித்துக்கொண்டு - ஊர்உலக
மொத்த கதைகளும் நியாபகம் வந்தவனாய்...
பேசி பேசியே காதை புண்ணாக்க இவனிடம்
அடுத்த பிரசங்கம் செய்யவேண்டுமாயென
தலையை மட்டும் அசைத்துக்கொண்டிருந்தார்..!

நேரம் குறித்த அளவை தாண்ட
உங்களுக்கு பசிக்கவில்லையா என
குண்டைத் தூக்கிப்போட்டார்...
நான் பேசுறது போரடித்துவிட்டதோ என
மனதில் நினைத்தவாறு...
வாங்க வெளியில்போய் சாப்பிடலாமே என்றேன்...
மறுபடியும் முதல்லயிருந்தா நினைத்திருப்பார்போல
சற்று யோசித்தபின் சம்மதம் வந்தது...!

இரவுகளோடு கூடிய இருவரின் பயணம்
தொடங்கியது முதல் முடிவுவரை என்
வாய்ப்பேச்சுக்கு ஓய்வு கொடுக்கவில்லை...
இடை இடையில் என் பேச்சைநிப்பாட்ட
நாம சைவம் சாப்பிடலாமே
அசைவம் சாப்பிடுங்க அப்போதான்
என்னைப்போல் தெம்பாக நடப்பீர்கள் என
நானும் விடாமல் காதைத்தைத்தேன்...!

உணவகம் வந்துவிட்டது
இங்கு செல்லாலாமே என உணவு
கொடுத்தாவது வாயைமூடலாம் என்று நினைத்தார்...
ஹிந்தி பேசும் உணவகம் அது
அங்கு இங்கு சுத்திப்பார்த்தும்
சேட்டன்களைக் காணவில்லை - எனக்கு
தெரிந்த ஹிந்தியில் சாப்பாடு சொல்ல...!

1 பை 2 என சொன்னவரை
முழுசா சாப்பிடுங்க
மிச்சம் வந்தா பார்த்துக்கலாம் ஏதோ
ஆசான் போல் சொல்லி முடித்து
சாப்பாடை திணிக்க... – ஏற்கனவே
இருந்த கால் வலியோடு என்
வார்த்தைகளை கேட்ட காதுவலியோடு...
சாப்பிட்டுமுடிந்து திரும்பி நடக்கலானோம்...!

இந்த சூட்டுக்கு Fresh Juice குடித்தால்
ஆறாக ஓடும் வியர்வைக்கு அணைபோடலாமென
எனக்கு தெரிந்த எதுகைமோனையில் சொல்லிமுடிக்க..
வழியோரகடையில் அரைமணிநேரம் காக்கவைத்துவிட்டேன்
1 மணி நேரம் பிரசங்கம் செய்யும்போது வலிக்கவில்லை - இவன் தொல்லைக்கு அளவில்லையே என நினைத்திருப்பார்...!

எனக்கு பிடித்த அவகோடாவில்
சீனியும் ஐசும் அள்ளிபோட எனக்கு
நாக்கு ஊறியது... – இந்த வயசுல
இவ்வளவு சீனியா என மிரண்டு போனார்...
நொறுங்க தின்றால் நூறு வயசு என
அடிக்கிற சூட்டிற்கு ஐஸ் வைக்க...
வெந்த வேக்காட்டில் வெட்டிப்பேச்சோடு
குடித்தவாறே நடந்து வந்தோம்...!

ஆலய வாசலை அடையும்போது நீ
எப்போதும் இப்படித்தானா என்று கேட்டவரிடம்...
வரும்போது என்ன கொண்டுவந்தோம்
போகும்போது என்ன கொண்டு போகிறோம்...
என சொன்ன என்னை உற்றுப்பார்த்துவிட்டு...
ஆள விடுடா சாமி என
அவர் மனதில் நினைத்தது
என் காதில் ஒலித்தது...
கொஞ்சம் ஓவராகத் தான் பேசிட்டோமோ என
நினைத்தவரே புன்னகையுடன் நடக்கலானேன்
மனதிலிருந்த வேதனைகளை மறந்து....!

இப்படித்தானோ...!
எல்லாவற்றையும் புன்முறுவலோடு ஏற்றுக்கொண்டு
நம்முடன் சேர்ந்து பயணிக்கிறார்கள்...
ஆன்மீக தந்தைகள் நமக்காக...!


-ஜோ. பிரிட்டோ ராஜ்

3 comments:

  1. Very Good one Britto. Simple but nice to SEE reading your words.

    ReplyDelete
  2. Britto!! நீ அவ்வளவு பேச மாட்டியே மக்கா!!
    அழகான எழுத்து! தொடர்ந்து நிறைய
    தினமும் எழுது! வாழ்த்துக்கள் பிரிட்டோ

    ReplyDelete

Do U Like This...