Saturday, May 27, 2017

நானும், கூடையில் இரண்டு பூக்களும் (Always Smile like a Flower)


நானும், கூடையில் இரண்டு பூக்களும்...!

நடைபாதை கடையில் சாப்பிட்டு ஏப்பம்விடும்போது  
யாரோ என்னை குருகுருவென பார்ப்பதுபோல் தோன்றியது...
நீதானா அது, கோவில் நோக்கி நடக்கிறேன்
அங்கேயே உன்னை இறக்கிவிட்டு போகிறேன் - என
இரண்டை வாங்கி கூடையில் போட்டேன்...!

வாங்கியது முதல் ஈஈஈ என  
32 பல்லைக்காட்டி இழித்துக்கொண்டேயிருந்தது...
கோவிலினுள் சென்றமர்ந்தேன்
சில நிமிட பிரார்த்தனையில்
சிலநூறு குறைகளை அடுக்கிவிட்டேன்...
பார்ப்பவர்களெல்லாம்
பஞ்சத்தில் அடிபட்டவர்கள்போல் பரிதாபமாக செல்ல
இவை இரண்டும் புன்னகைத்து கொண்டேயிருந்தன...!

நானும் இவர்களது ரசிகனாயிற்றேன் 
எனக்குள்ளே சிரித்தும் கொண்டேன்
அருகிலிருந்த சுட்டி குழந்தை
தாவிவந்து பூவை எடுக்க
பைதவரி இரண்டும் கீழே விழந்தன
கோபங்கொண்டு பொங்கியெழுந்து
காதை திருக கையெடுத்தேன்...
கூடையில் இருந்ததைவிட
வெளியில் வந்து அதிகமாக புன்னகைத்ததால்
கோபக்கையை சட்டை பாக்கெட்டுக்குள் தடவி
மிட்டாய் கொடுத்து அனுப்பி வைத்தேன்...!

கபடமில்லா புன்னகைக்கும் பூக்களை  
இறைவனுக்கும் காணிக்கையாக்க மனமில்லாமல்
கூடைக்குள் மறைத்து கொண்டு
அந்த இரவு நேரத்தில்
நிலவைவிட வேகமாக
அதைவிட பிரகாசமாக
புன்னகைத்துக்கொண்டே வீடுநோக்கி நடந்தோம்...!

நடுநிசிக்கி ஒருமணிநேரம் பாக்கி 
நண்பனிடமிருந்து அழைப்புவந்தது
செருப்புகளை கூட கழற்றாமல்
வீட்டிற்குள் நுழைந்துவிட்டேன்...!

நமது நண்பன் விபத்தில் மாட்டிக்கொண்டான் 
பிழைக்கவைக்க இரத்தம் வேண்டும்
நீயும் இல்லை நான் என்ன செய்ய அழுகுரல்...!

பிழைப்புக்காக ஊரைவிட்டு வந்துவிட்டேன்
ஒரேவகை இரத்தம் இருந்தும்
உதவமுடியாமல் வெட்கி தலைகுனிந்தேன்
என்னை அறியாமல் கண்ணீர் ஆறாக ஓடியது...!

பிற நண்பர்கள் மூலம் உதவுகிறேன் என கூறி 
அனைத்து நண்பர்களுக்கும் அழைப்புவிடுத்தேன்
பதில் பேச யாரும் இல்லை
பேசியவர்களும் நாளை பார்க்கலாம் – என
இணைப்பை துண்டிக்க
ஒருநிமிடம் நொந்து போய் இருக்கையில் அமர்ந்தேன்...!

நடப்பது யாவும் அறியாமல் 
பையிலிருந்த கூடைப்பூக்கள் சிரித்துக்கொண்டே இருந்தன
ஏளனமா செய்கிறாயென விட்டெறிந்தேன் மூலைக்கு...!

அருமையான நண்பன் அவன் 
எப்படி உயிர் பிழைக்கப்போகிறான் – வருத்தத்திலே
தன்னிலை மறந்து தூங்கிவிட்டேன்...
காலை எழுந்ததுமே கைப்பேசியை தேடினேன்
தேடிய இரத்தம் கிடைத்துவிட்டது
நண்பனும் தேரிவிட்டாநென்று குறுந்தகவல்...
சந்தோசத்தில் கால்கள் குதித்தன
உற்ச்சாகமாக வேலைக்கு சென்றேன்...!

உழைப்பின் களைப்பில் வீடுசேர்ந்து - உடல் 
அசதியோடு அமர்ந்தவரே மூலையை நோக்கினேன் 
பூக்கள் இரண்டும் புன்னகிக்காமல் வீழ்ந்துகிடந்தது
ஓடிசென்று கட்டி அணைத்தேன் – இறைவா
என்ன விலை வேண்டும் இந்த புன்னகையை
திரும்பபெற என கதறி அழுதேன்...!

எத்தனை பாவி நான்  
சந்தோசமாக அக்களித்த பூக்களை கொன்றுவிட்டேனே
இனி இந்த முகத்தில் எப்படி புன்னகையை பார்ப்பேன்...
எனது துன்பத்திற்காக உன்னை நோகடித்துவிட்டேனே – என
என்னையே நான் கடிந்துகொண்டேன்...!

நேற்றைய சிரித்த முகமும் சிந்தனைகளும் 
வந்து வந்து போயின – உணவுக்காக
நடை பாதை கடையை நோக்கி சென்றேன் - இப்பொழுதும்
யாரோ குறுகுறுவென பார்ப்பதுபோல் தோன்றியது
மனதில் ஒரு குற்ற உணர்வு
என் கண்களை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை
அந்த புன்னகைகள் என்னை நோகடித்தன
யோசிக்க வழியில்லாமல்
திரும்பி பார்த்தேன் கண்கள் குளமாயின...
அவர்களை போலவே, பத்து பூக்கள்
என்னை நோக்கி புன்னகைத்து கொண்டிருந்தன
வருத்தப்பட்ட கண்களில் ஆனந்தம் பொங்கின
அள்ளி அணைக்க கைகள் தேடின...!

எப்படி உங்களால் மட்டும் முடிகிறது 
உங்களது நண்பர்களை கொன்றுவிட்டேனே
என்னை பார்த்து ஏன் புன்னகைக்கிறீர்கள் – என்றேன்
தன்னிலைமறந்து வேண்டலுடன்...!

எல்லாம் சத்தமாக கூறின 
வாழ்வது ஒரு நாளோ, பல வருடமோ – வருகின்ற
இன்பத்தையும் துன்பத்தையும் புன்னகையால் நிரப்புங்கள்
வாழும் காலம் சொர்க்கமாக இருக்குமென...!

புத்திக்கு இப்போதுதான் உரைத்தது 
கூடை நிறைய பூக்களை நிரப்பிக்கொண்டு
புன்னகையோடு நடக்கலானேன்...!

- ஜோ. பிரிட்டோ ராஜ்

No comments:

Post a Comment

Do U Like This...