பல மொழிகள்
கண்ட நிகழ்ச்சியது
பல்சுவை
நிகழ்வுகள் அரங்கேரியது
பதிவுகளை
புகைப்படமெடுக்க
சூரியனுக்கும்
அனுமதியில்லை
பனிகளால்
மூடிவிட்டு
படைத்தவனும் பார்த்து ரசித்தான்...*
தென்றலும்
குளிரூட்டியது
அனல்வாடை
காற்றை தவிர்த்தது...
இறைவனுக்கு
ஓய்வு கொடுத்து
நிம்மதியாய்
தூங்கவைத்தோம்...
ஆர்ப்பரிக்கும்
வாத்தியங்கள் எழுப்பிவிடுமென
ஆங்கில
வார்த்தை புனைந்து
இருமணிக்கொருமுறை
தாலாட்டு பாடிவைத்தோம்...*
வாசலில்
பாதுகாப்பு
கலாச்சார
வளைகாப்பு
பொழுதுபோக்கின்
சாரம்குறையா
உணவகத்தின் மொருமொருப்பு
எண்ணயியலா
மக்கள் வெள்ளம்தான்
குடும்பவிழாவின்
தனி சிறப்பு...*
மிருதங்கம்
இசைமீட்ட
திருமண கோலம்
பூண்டது...
மணதம்பதிகள்
தோழர்களோடு
கலாச்சார வலம் வந்தது...
அழையா விருந்தாளியாய்
ஔவையும்
கட்டபொம்மனும் தரணி வந்தனர்
விவசாய
மக்களோடு சேர்ந்து வாழ்த்தி சென்றனர்...*
அத்தனை
குளிரிலும்
அசராத
குழந்தைகளின் ஆட்டம்...
அசையாது பார்த்த
கூட்டம் - சற்று
வழிவிட்டு நின்றனவே - எங்கள்
கலாச்சாரம்
கண்டு வியந்தனவே...*
பன்னாட்டு
இசைகளெல்லாம்
படிந்தன தமிழனின்
பரதம் கண்டு...
இந்நாட்டு டிஜிட்டல்
கண்களெல்லாம்
வியந்தன நங்கைகளின் நடனம் நன்று…*
குடும்பங்களை
ஒன்றிணைத்து
வட்டிபிரிக்க கூட்டம் வலைவிரித்தது..
200க்கும்,
500க்கும்
பரிசுகளை காட்டி
நைசாய் காசு கரக்கும் கும்பல்தானது...
நாள்முழுக்க அலைந்தாலும் விற்றாலும்
கொடுத்து
கொடுத்து கைகள்தான் சிவந்தாலும்
மனது மட்டும்
நிறைவானது
ஆலயத்தின்
பணிகளுக்காக உதவும்போது...*
அளந்துவைத்த
அறுசுவைகள் ஆயிரமிருக்க
சோதித்து
பார்த்தன ஐம்புலன்கள்...
ஜான் பிடி
வயிறு இது - எப்படி
எல்லாவற்றையும்
சுவைத்துபார்க்க போகிறது...
ஒன்றை மட்டும்
சுவைப்போமென
மனது கட்டுபாடு
போட்டது...
வாங்கிதின்று கூப்பன்கள் தீரந்துவிட்டன
மனசு மட்டும்
நிறையவில்லை
படைத்தவர்களை வாழ்த்தவும்
வயதில்லை...*
மிருதங்கத்தில்
வாசித்த பறைகண்டு
குளிர்
நரம்புகளும் சூடாயின
காதுகள்
அமைதியாக இருக்க
கால்கள்
மட்டும் வேலையை காமிக்கிறது...
குத்தாட்டம்
போட வயதுமில்லை
குளிரைப்போக்க
வேறு வழியுமில்லை...*
திட்டம் தீட்டி
சேவைகள் செய்தாலும்
திட்டிதீர்க்க
மனதிலிடமுண்டு...
ஒத்துழையாமல்
ஒதுங்கியவர்களுக்கு
செய்த பலனை
கண்ணில் காண
குடுப்பனையில்லையென
நினைத்து – மறுநாள்
நிம்மதி
பெருமூச்சுவிட தோனுகிறது...*
ஜாதி மதம்
பார்க்காத கூட்டமிது
ஆலயத்திற்க்காய்
வாரிவழங்கும் வள்ளலிது
கோவில் பக்கம்
ஒதுங்காத மக்களாயினும் – அதிர்ஷ்ட
பரிசுவிழுந்து
அழகுபார்க்கும் இறைவன் கருணையது...*
அள்ளி கொடுத்த
உறவுகள்
வாங்கி
செல்லும் இதயங்கள்
சேவையுள்ளம்
கொண்ட மக்களென
பிரிக்கயியலா
நேசமிது – எங்கள்
குடும்பவிழாவை பார்த்தால் புரிகிறது...*
-ஜோ. பிரிட்டோ ராஜ்