Sunday, February 19, 2017

நாம் எப்படி விலை போகிறோம் (Youth Politics)

வாக்காளர்கள் வெறும் பணத்துக்கா விலை போகிறார்கள்...! 
பணம்தான் ஓட்டிற்கு விலையாய் கொடுக்கப்படுகிறதா???
நாம் எப்படி விலை போகிறோம்...!

  • பெரிய கட்சிகளுக்குதான் அரசியல் திறமை உள்ளது என்ற எண்ணம்
  • ஒரு தலைவரை மட்டும் முன்னிறுத்தி மொத்த வேட்பாளர்களையும் எடை போடும் தன்மை
  • அரசியல்வாதிகளால் மட்டுமே முழுநேர அரசியலில் ஈடுபட முடியும் என நினைப்பது
  • ஜெயிக்கிற கட்சிக்குத்தான் என் ஓட்டு என்ற தன்னம்பிக்கையில்லா தன்மை
  • பணம் வைத்திருப்பவர்கள்தான், நிர்வாகத்திறமை உள்ளவர்கள் என்ற எண்ணம்
  • இறந்து போன தலைவர்களை காரணம் காட்டி ஓட்டு போடுதல்
  • இத்தனை வருடங்கள் நமது மாநிலத்திற்கு (அ) நமது மாவட்டத்திற்கு (அ) நமது ஊருக்கு (அ) நமது வீட்டுக்கு இவர்களால் என்ன முன்னேற்றம் அடைந்தது என யோசிக்க முடியாத தன்மை
  • புதிதாக வருபவர்களுக்கு அனுபவமில்லை என்ற பேச்சு, முன்னர் இருந்தவர்கள்தான் நம்மை சிறப்பாக வழிநடத்தமுடியும் எனும் கண்மூடித்தனமான நம்பிக்கை
  • பிரச்சாரம் பண்ணும் நாள்களைதவிர தொகுதிபக்கம் எட்டி பார்க்காத தலைவர்களை, இந்த 20ம் நூற்றாண்டில் கூட நம்பி திரும்பவும் அவர்களையே தேர்ந்தெடுத்தல்
  • ஒரே சமூகமே நான்கு கட்சிகளாக பிரிந்து, கட்சிதான் முக்கியம் சமூகம் முக்கியமில்லை என அடிபணிவது, ஓட்டு போடுவது
  • சுயமாக சிந்தித்து தன் வழியில் நடக்கதெரியாத வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து அவர்களிடம் நல்லது நடக்கும் என எதிர்பார்த்தல்
  • கட்சிகள், தலைவர்கள் சேர்ந்து ஆயிரம் கொள்ளைகள், ஊழல்கள் செய்தாலும், திரும்பவும் இவர்களால்தான் ஆட்சி மாற்றம் செய்யமுடியும் என வேடிக்கையாய் நம்புவது
  • எத்தனை பேர் நமது தொகுதியில் போட்டியிடுகிறார்கள், அவர்கள் எப்படிபட்டவர்கள் என அலசி ஆராயாமலே, பழகிப்போன சின்னங்களுக்கே ஓட்டுக்களை போடுதல்
  • அவர்கள் ரோடு போட்டார்கள், பாலம் போட்டார்கள், இலவசம் கொடுத்தார்கள் என அவர்களது பொறுப்புகளை சாதனையாய் நம்புவது
  • ஆளுங்கட்சி, எதிர்கட்சி இவர்களால்தான் மாநிலம் முன்னேறும் என நினைப்பவர்கள், இதுவரை எத்தனை போராட்டங்கள் மற்றும் பிரச்சினைகளை சாதித்தார்கள் என சீர்தூக்கி பார்க்காத தன்மை
இன்னும் எத்தனையோ மூடநம்பிக்கைகள் நமக்குள் வாழ்வதால்தான் சுயேச்சையாக தேர்தலை காணும் வேட்பாளர்களை ஏளனமாய் பார்த்து, இன்று மனிதனை பார்க்காமல் கட்சிக்காக ஓட்டு போட்டு, தெரிந்த ஊழல் கட்சிகளையே திரும்பத்திரும்ப தேர்ந்தெடுத்து சந்தோசப்படும் நாம், நாளை நமது பிரச்சினைகளுக்காக சுயேச்சையாகத்தான் போராடுவோம் என்பது எப்பொழுது தெளிவாகும்.

இங்கு பணம் மட்டுமல்ல, மக்களின் மனமும் மாறவேண்டும், இளையதலைமுறையின் ஆட்சி மண்ணில் மலர...
http://youthpolitics.in/
- ஜோ. பிரிட்டோ ராஜ் 

No comments:

Post a Comment

Do U Like This...