கஞ்சி ஊத்த அரிசி
இல்லை
அடுப்படிகள்
காய்கிறது...
மொண்டு குடிக்க
நீருமில்லை
வானம் பல்லை
இளிக்கிறது...
ஒரேநாடு ஒரேமக்கள்
பேச்சு மட்டும்
இனிக்கிறது...
எல்லைகள் தாண்டி
உதவிகேட்டால்
நீதி கைகொட்டி
சிரிக்கிறது...*
பன்றிக்கறியும், மாட்டுக்கறியும் தான்
இன்று தேசப்பற்று
பேச்சு...
சகிப்பின்மையும், சண்டையும் தான்
வெளிநாட்டில் வாழ
தகுதியாச்சு...
சமத்துவங்கள்
வேண்டுமென்று சுதந்திரபேச்சு
எனது கலாச்சாரம்
அழிகிறது, நீதியும்போச்சு
தெருவில்
வந்துபோராடி நாள்பகல் ஆச்சு
கிடைத்த அடிதான்
மிச்சம் மானமும்போச்சு...*
நாட்டின்...
பொருளாதார
முன்னேற்றம் வேண்டும்
சேர்ந்து குரல்கொடுத்தோம்...
- எங்கள்
காலாச்சார
பாதுகாப்பு வேண்டும்
ஏனோ
தனிமைபடுத்தபட்டோம்...*
பேசும் மொழிகள்
பலவாயினும்
ஒரேநாடு என
வாழ்ந்து வருகிறோம்...
நாம் கத்தும்
கதறல் புரியாத
காதுகள் இருந்தால்
– எங்கு
சென்று
பிரச்சனைகளை முறையிடுவோம்...*
ஊருக்கொரு
நீதியென்று கையேந்தவில்லை
நான் சாப்பிடும்
இட்டிலிக்குள்
சப்பாத்தியை
திணிக்கிறாய்
ஏன் என்று
புரியவில்லை...*
மாநில எல்லை தாண்ட
முடிவதில்லை
நாங்கள் என்ன
தனிநாடா விளங்கவில்லை
நம்மை
மதிக்கிறார்களா, நேசிக்கிறார்களா தெரியவில்லை
நமது ஊடகங்களும் மொழிபெயர்ப்பு
செய்வதுமில்லை
ஆண்டபரம்பரை
என்பதில் அர்த்தமில்லை – நாம்
ஓன்றுசேராமல்
இதற்க்கு என்றும் முடிவுமில்லை...*
-ஜோ. பிரிட்டோ
ராஜ்
No comments:
Post a Comment
Do U Like This...