Wednesday, August 3, 2016

பழகும் மனிதர்கள்..!!

இப்போதெல்லாம்...
தெருவில் பின் தொடர்பவர்களை விட...!
Facebook-ல் பின் தொடர்பவர்களிடம்தான் பார்த்து பழகவேண்டியுள்ளது...!!
.
.
முகத்தை நம்பு
முகபுத்தகத்தை நம்பாதே...!!!

முடிவில்லா கேள்விகள்..!!!

ஆண்டி மடம் கட்ட நினைப்பதும்..
சமூகவலைதளத்தில் சமூக உரிமைக்காக போராடுவதும் ஒன்றே..
.
.
-இரண்டுக்கும் முடிவு கிடைக்கவே கிடைக்காது

Tuesday, August 2, 2016

அது எப்படி???

உலகுக்கே சோறுபோடுற நாடுகளெல்லாம்
ஏழையாய் இருக்கிறபோது...
வாங்கி சாப்பிடுற நாடுகளெல்லாம்
பணக்காரர்களாய் இருக்கிறாங்களே...!!!

2020 உங்களைதான் வரவேற்கிறது...!

இன்று இளைஞர்கள் மத்தியில்
.
தமிழ்நாட்டின் பட்ஜெட் விவாதத்தை விட
கபாலி பட்ஜெட் பற்றியே அதிகமாக விவாதம் நடக்கிறது...
.
அரசியல் சாக்கடை என்பவர்கள்
நடிகர்களுக்கு பாலாபிசேகம் செய்கிறார்கள்..
.
.
2020 உங்களைதான் வரவேற்கிறது

மகிழ்ச்சி

50 பேரை வாழவைப்பதை விட
50 பேரை அடிப்பதைத்தான்
நடிகர்களிடம் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்...!
.
"நான் மேல வருவேண்டா,
முன்னேறுவேண்டா,
கோட்டும் சூட்டும் போட்டுக்கிட்டு
உங்க முன்னாடி கால்மேல கால் போட்டு உட்காருவேண்டா.....
பிடிக்கலேன்னா சாவுங்கடா" - என்ற
ஒரு இனத்தின் ஆதங்க குரலை யாரும் கவனிக்கவில்லை, கவனிக்கவும் மாட்டார்கள்..!!
.
இங்கு கதையைவிட
நடிகனைத்தான் மதிக்கிறார்கள்..

-மகிழ்ச்சி

வெளிநாட்டுவாழ் மக்களின் வாழ்க்கை?

வெளிநாட்டுவாழ் மக்களின் வாழ்க்கை,
இந்த இரண்டு கேள்விக்குள் அடங்கிவிடுகிறது..!

எப்போடா ஊருக்கு போகிறாய்?
ஏன்டா இன்னும் வெளிநாட்டிற்கு போகவில்லை?

முதலாவது ஏக்கத்திற்க்கானது...
இரண்டாவது வருமைக்கானது...
.
.
-அனுபவித்தவர்களுக்குத்தான் புரியும்.

தொலைதூர பயணங்கள்

தொலைதூர பயணங்கள்
நம்மை மட்டுமல்ல
நமது சொந்தங்களையும் பிரித்து சென்றுவிடுகிறது..!!!

ரசிகர்களின் சதுரங்கவேட்டை..!!!

நடிகனின் பலம் யார்?
.
எதிர்பார்ப்பில் தலையில் வைத்து கொண்டாடுவதும்
தோல்வியில் மட்டமாக விமர்சிப்பதும்...
விலையில்லா விளம்பரம்தானே...
.
இது ரசிகர்களின் சதுரங்கவேட்டை..!!!

துண்டை போட்டு தாண்டலாமோ???

சமூகத்தில்...!
நாம் நன்றாக பேசினாலும் (அ) நடந்தாலும்...
அதற்க்கு எதிர்மறையான அர்த்தங்களை மற்றொருவர் உருவாக்கிவிடுவதால்...!!
.
நாம் நல்லவரா (அ) கெட்டவரா என நிரூபிப்பதே பெரிய பாடாய்விடுகிறது...!!!

நன்றி...!

நன்றி சொல்ல வேண்டும் - எனும்
மனம் இருந்தால்...!
உங்களுக்கு அதற்கான வாய்ப்புகள்
வந்து கொண்டே இருக்கும்..!!!

வாழும்போதே சொர்க்கம் வேண்டுமா!

திருப்தி அடையுங்கள் - உங்களுக்கு அமைந்த மனைவி/கணவன், உணவு மற்றும் நியாமான முறையில் வரும் வருமானத்தில்...
ஆனால்..!
திருப்தி அடையாதீர்கள் - கற்கும் கல்வி மற்றும் தர்ம காரியங்களை தொடர்ந்து செய்வதில்...

மனதில் நிறுத்தவேண்டியது..!

சூழ்நிலைகளும், சந்தர்ப்பமும் - ஒருவனை
இரக்கமற்ற, தன்னலமுற்ற
மனிதனாய் மாற்றிவிடுகிறது...!!!

வாழ்வியல்‬ ‪உண்மைகள்‬..!

இளமையில் அலட்சியமாக - தட்டிவிட்ட
சோற்றுப்பருக்கைகள் தான்..!
முதுமையில் கையேந்தினாலும்
தட்டுகளில் கிடைப்பதில்லை...!!