Wednesday, February 28, 2018

Save Syria... Pray for Peace in SYRIA (Tamil - 2018)



பசியால் சாகடிக்கிறோம்
பிணியால் சாகடிக்கிறோம்
பிரிவினையால் சாகடிக்கிறோம்
இன்னும் எத்தனை எத்தனையோ...
வெறும் உடலை கொல்லவா
இந்த போர்களும், அழிவுகளும்...
மனிதா! உனது ஆறறிவும்
அழியயியலா திறனும்
சிறு குழந்தைகளை அழிக்கவா...!

உலகம்... 
ஒருபுறம் கோடிகளில் செழிக்க
மறுபுறம் தெருக்கோடிகளில் அலைகிறது...
மனிதா உன்...
ஒரு ஜான் வயிற்றை நிரப்ப
சமுத்திரம்தான் வேண்டுமோ...!

எங்கே சமநிலை மனிதா
உன்னைப்போல் தானே மற்றவனும்...
ஒதுக்கப்படும் இனமும் ஓருருவம் தானே
அழிந்துபோகும் உடலும் ஓருடல் தானே
இம்மானிட பிறப்பில்...
மனம் மட்டும் ஏன் மாற்றினாய் இறைவா
இந்த மதிகெட்டோர் வீதியில்...!

உன் தோழனின் அழுகுரல் - உன்
காதுக்கு எட்டவில்லையோ...
அவன் அழிவின் சாரங்கள் - உன்
கண்களில் விழவில்லையோ... - இல்லை
எல்லாம் முடிந்த பின்
பூச்செண்டு கொண்டு போய்
புகைப்படமெடுக்க நினைக்கிறாயோ...!

மனது பதைபதைக்கிறது...
கண்கள் குளமாகிறது...
மத இன மொழிகளை தாண்டி - அவனும்
என்னைப்போல் ஒருவன் எனும்போது...
கடவுளிடம் இதை முறையிடுவதா - இல்லை
கரம் கொடுத்து தூக்கிவிடுவதா...!

என்னால் முடிந்தவற்றை இதில்
கொட்டி தீர்க்கின்றேன்...
எளிய மனம் படைத்தவர்கள்
இதைக் காணவேண்டும்
தங்களால் இயன்ற உதவிகளை செய்யவேண்டும்...
இறைவா இன்னொருமுறை - நீ
மீண்டும் பிறக்கவேண்டும்...
சிலுவையை சுமக்க அல்ல - எம்மக்களின்
சிலுவைகளை இறக்கி வைக்க...!

#savesyria #prayforsyria
.
.
-ஜோ. பிரிட்டோ ராஜ்

Saturday, February 10, 2018

மலரும் தருணங்களில் “குடும்பவிழா – 2018” (Bahrain Family Day - 2018)


மலரும் தருணங்களில் “குடும்பவிழா – 2018”

பேச முடியாத அளவுக்கு தொண்டை வலி
நடக்க முடியாத அளவுக்கு கால் வலி
வேலைசெய்ய முடியாத அளவுக்கு உடல் வலி
பெயர் சொல்ல முடியாத அளவுக்கு
பெரிய வியாதியாக இருக்குமோ... – என
யாரும் தவறாக நினைக்கவேண்டாம்...!
பிறருக்காக செய்த பணியில்
மறுநாள் கிடைக்கும் வெகுமதிகள்...
மறுபடியும் அப்படியொரு வாய்ப்பு அமைந்தது
எங்கள் குடும்ப விழாவில்..!

சொத்து சேர்க்க போராட்டமில்லை
வாங்கி குவிக்கும் எண்ணமுமில்லை
ஓய்வறியா அரபு பணிகள் நடுவில்...
பிறரின் தேவைகளுக்காக உழைத்தோம்
ஒன்றுகூடி, நாள் தூக்கம் மறந்து..!

கூவி கூவி அழைத்து விற்று
உடல் வறுத்த கூலி பெற்றோம்...
உலக மாந்தர்கள் நடுவினிலே
உயர்வான பணியை நிறைவேற்றி முடித்தோம்...!

விழாவும் நன்றாய் முடிச்சாச்சு
வித்த கடனையும் அடைச்சாச்சு
நன்றிகள் பல பகிர்ந்தாச்சு...
வாழ்த்துக்கள் வந்தும் குவிந்தாச்சு
அலங்கார தோரணைகள் அவிழ்த்துபோட
ஆலய வளாகமும் வெறிச்சோடிப்போச்சு...
விற்ற பாதமும், கூவிய சத்தமும்
இன்னும் காதில் ஒலிக்கிறது...
தன்னலம்பாரா உதவிய உள்ளங்களால்
எங்கள் குடும்பவிழா மேலும் இனிக்கிறது..
மறக்கமுடியா தருணங்களில் ஒன்றாய்...!



-ஜோ. பிரிட்டோ ராஜ்