கூடங்குளத்தில் பாதுகாப்பை ஆய்வு செய்ய குழு தேவை இல்லை: அணு உலைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி; சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு...
.
.
.
.
இதே போபால் விபத்திற்கு என்ன தீர்ப்பை சுப்ரீம்கோர்ட் வழங்கியதோ அதே நிலைமைதான் இனி அனுவுலைக்கும்..
பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வாழ்வுரிமை போனதே என தலையில் அடித்து கொள்கிறார்கள். நாம் ஜெயித்துவிட்டோம் என மற்றொரு பிரிவினர் மார்தட்டிக்கொள்கிறார்கள்.
என்னடா ஜனநாயகம்...
2010ம் ஆண்டிற்கு முன்பு தேவைப்படாத இந்த அணுவுலை இப்பொழுது அனைவரின் தேவையாக எழுந்து நிற்கிறது. அதற்க்கு முன்பு நமக்கு கிடைத்த தடையில்லா மின்சாரம், சில வருடங்களுக்கு முன் தடை செய்யப்பட்டது. தேவைகள் அதிகரித்துவிட்டது என ஒரு பிரிவினர் கூறினார்கள், ஆனால் அதற்க்கு மூல காரணமான மின்சாரம் முன்பு எப்படி பெற்று கொண்டிருந்தோம்(அணுவுலை இல்லாதபொழுது), ஏன் இப்பொழுது தடை படுகிறது என்பதை மறந்தோம்.
அதன் பிறகு அனைவரும் அணுவுலை மீது கவனம் செலுத்தினார்கள், எங்களுக்கு அணுவுலை வேண்டும், எங்கள் நாடும் குடும்பமும் முன்னேறவேண்டும் எனவே அணுவுலை தேவை என ஆதரித்து பேசினார்கள்.
இன்னும் நாட்கள் இருக்கிறது எங்களது பிணங்களை வைத்து உங்களுக்கு அனுதாப ஓட்டுக்கள் வாங்கித்தருவோம். அப்பொழுது இந்த மனித நல மேம்பாட்டுக்குழுவிற்கு நோபல் பரிசும் கிடைக்கும், அவர்களது அயராத உழைப்பும்(நடிப்பும்) தெரியவரும்.
அப்பொழுதும் இதே சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு வழங்கும், எவ்வாரென்றல்..
மத்தியஅரசு தனது கடமையை செய்ய தவறிவிட்டது, பாதிக்கப்பட்டவர்களுக்கு 1000 ரூபாய் நிதிவுதவியும், இலங்கையில் குடியுரிமையும் அமைத்து தரப்படும். ஏனெனில் இந்தியா வல்லரசாகிவிட்டது.
நம்புங்கள்...
என்னடா ஜனநாயகம்.. எதுடா சுதந்திரம்...
இன்னும் நாம் அடிமைப்பட்டுத்தான் கிடக்கிறோம், மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் அரசு என்ற வார்த்தையை நம்பி..
என் வார்த்தைகள் உண்மை என்றால் பகிருங்கள், நாளை இதுவே சாட்சியாக அமையட்டும்....
---பிரிட்டோ ராஜ்
No comments:
Post a Comment
Do U Like This...