Monday, April 28, 2014

இந்திய மக்களுக்கென்று ஒரு சமூக வலைதளம் ( A social website for Indian People)



                Facebook எனும் ஒரு வலைதளத்தை நிறுவி, அதில் உலகத்தில் உள்ள அணைத்து மக்களும் தங்கள் இன்பம் மற்றும் துன்பங்களை பகிர்ந்து கொள்கிறார்கள்..

அதைப்போல..
இந்திய மக்கள் அனைவரும் (காஸ்மீர் முதல் கன்னியாகுமரி வரை) மட்டும் உபயோகபடுத்தும் வண்ணம் நமக்கென்று FaceBook போன்று ஒரு அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தை உருவாக்கமுடியாது. முடியும் என்றால்..

இதனால் ஏற்ப்படும் நன்மைகள்..
  1.        எந்த ஒரு இந்தியனும், எந்த ஒரு மூலையிலிருந்தும் தகவல்களை பரிமாறலாம்
  2.        FB போல் அல்லாமல் (முகம்தெரியாத மற்றும் பழக்கமில்லாத தொடர்புகளை சேர்த்துக்கொள்ள முடியாது), இந்திய மக்கள் அனைவருடன் சேர்ந்து நட்புறவில் இருக்கலாம்.
  3.        இந்தியன் ஒவ்வொருவரின் பெயர் மற்றும் அவர்களை சார்ந்த தகவல்களை பெறமுடியும் (ஆதர் அடையாள அட்டைப்போல)
  4.        ஊடகங்களின் வேலைகள் குறையும்.
  5.        சமூக அவலங்களை மற்றும் அதிகாரிகளின் முறைகேடுகளை உடனுக்குடன் அனைவருக்கும் பகிரலாம் மற்றும் தீர்வு காணலாம்.
  6.        காவல்த்துறை நண்பர்களுக்கும் மற்றும் பிற அதிகாரிகளுக்கும் எல்லா தகவல்களும் உடனே சென்றுசேரும்.
  7.        எந்த ஒரு சட்டமும் வாக்கெடுப்பும் மற்றும் அரசியல் சாதனங்களும் எல்லா மக்களுக்கும் தெரியும் வண்ணம் வெளிப்படையாக மாறும்.
  8.        கல்வி மற்றும் வேலைவாய்ப்பு இந்தியாவில் எந்த மூலையில் இருந்தாலும் அது இந்தியருக்கே கிடைக்கும் வண்ணம் மாறும்.
  9.        பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான அச்சுறுத்தல்கள் இதன் மூலம் குறையும், ஏனெனில் எல்லாரும் ஒரே இடத்தில் இருப்பதால் தகவல்கள் அருகில் உள்ளவருக்கு எளிதில் சென்று சேரும்.
  10.    FBல் பொழுது கழிப்பவர்களுக்கு, இது ஒரு சமூக மேம்பாட்டு வலைதளமாய் மாறும்.
  11.    யாரும் யாரையும் ஏமாற்ற முடியாது, ஏனெனில் இதில் அணைத்து தகவல்களும் சேமிக்கப்பட்டு விடும்.
  12.    இந்த வலைதளத்தை இலவச பயன்பாடாக மக்களுக்கு கொடுக்கப்படவேண்டும்.


இது ஒரு மிகப்பெரிய புரட்சி, இது நடந்தால் இந்தியா ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாடாய் மலரும்.
இதை அனைவருக்கும் பகிருவோம்.. மறுமலர்ச்சியை ஏற்ப்படுத்துவோம்.

- உங்கள் கருத்துக்களை பகிரவும்.. பிரிட்டோ ராஜ்.

No comments:

Post a Comment

Do U Like This...