Thursday, March 14, 2019

முகநூலும் இருமுகங்களும் (Facebook Faces)







முகநூலும் இருமுகங்களும்..!

ஒருமுகம்...

அது நல்லதை பாராட்டும் 
அது நட்பாய் பழகும் 
அது மறவாமல் வாழ்த்துக்கள் கூறும் 
அது துன்பத்தில் ஆறுதல் படுத்தும் 
அது இனிய நிகழ்வுகளை விளம்பரப்படுத்தும் 
அது பொதுநிலையை ஊக்குவிக்கும் 
அது அனைவரையும் ஒன்றுபடுத்தும் 
அது இடர்களில் கைகொடுக்கும் 
அது நல்லது செய்ய தூண்டும் 
அது வாழ்வுக்கு வழிகாட்டும்...

மறுமுகம்...

அது தன்னிலை மறக்க வைக்கும் 
அது கோபத்தை வெளிபடுத்தும் 
அது காலமறிந்து பிரிவினை பேசும் 
அது கலவரத்தை தூண்டும் 
அது நஞ்சை விதைக்கும் 
அது கெட்டதை பரப்பும் 
அது ஒற்றுமையைக் கெடுக்கும் 
அது தீயவனவற்றை பழகச் செய்யும் 
அது ஆபாசத்தை ஊக்குவிக்கும் 
அது தவறானபாதைக்கு அழைக்கும் 
அது நிம்மதியை குலைக்கும் 
அது நம்மை மறைத்து வைக்கும் 
அது நம்மை தனிமைபடுத்தும் 
அது நம்மை ஆக்கிரமிக்க பார்க்கும்...

எதை நீ அணிந்து 
முகநூலில் பயணிக்கிறாயோ – அதன்படி 
நம் வாழ்வும் செயலும் அமையும்... 
இங்கே 
இரட்டை முகமூடி அணிபவர்களும் உண்டு 
அதை உணர்ந்து பழகினால் நன்று... 
முகநூலுக்கு அடிமையாகாதே - யாரும்
உன்னை அடிமைபடுத்தவும் விடாதே... 
தெரியாத முகத்தின் பிடியில் சிக்காதே 
வாழ்க்கை உன் கையில் என்பதையும் மறக்காதே...! 
. 
.  
ஜோ. பிரிட்டோ ராஜ் கிளாரா

Monday, February 25, 2019

அன்பின் தேவதை - Aroha Clabrin


அன்பின் தேவதை
அகிலம் காண வரவுள்ளாள்...
சூரியனுக்கு தூது சொல்லுங்க
சுட்டெரிக்கும் வெயிலை குறைக்க சொல்லி...
சந்திரனுக்கு தூது சொல்லுங்க
இதமா நாளும் இருக்க சொல்லி...!

இறைவனின் இனிய படைப்பு
இந்த மண்ணை காண வருகிறாள் - அவள்
புன்னகையை பார்க்க கோடி கண்கள் வேண்டும்
சினுங்கும் ஓசை கேட்க கோடி காதுகள் வேண்டும்
பூமியில் தன் பாதம் பதிக்க
இது புண்ணியம் செய்ய வேண்டும்...
இந்த உலகுக்கு நல்சேதி சொல்வாள் அதைக்கேட்கத்தான்
நமக்கு சில மாதங்கள் வேண்டும்...
குழந்தையாய் மகள் பிறக்க 
நல்ல பாக்கியமும் செய்ய வேண்டும்..!

கால் பருவ படிப்பு காத்திருக்கு
அரை பருவ உறவு காத்திருக்கு
முழு பருவ உழைப்பு காத்திருக்கு
இதையெல்லாம் தெரிந்துகொண்டு வருவாளா
தெரிய வைத்தால் இப்பூமிக்கே வருவாளா...!

முதல் பார்வையில்
இப்பூமியைக் கண்டு ரசிப்பாளா
மனிதர்களை பார்த்து சிரிப்பாளா – இல்லை
இதெல்லாம் வேண்டாமென அழுவாளா..!
மனித கோட்பாடுகளை அறிவாளா
மனித சட்டதிட்டங்களை மதிப்பாளா
ஆசைகளின் பிடியில் சிக்குவாளா
தேவைகளின் பிடியில் தவிப்பாளா

நான் எவ்வாறு கோபப்படுவேன்
அவள் தவறுகள் செய்யும்போது... 
நான் எவ்வாறு சந்தோசப்படுவேன்
அவள் கொஞ்சி விளையாடும்போது...
உலகை சுற்றி பார்க்க ஆசையில்லை
சந்திரனுக்கு போக வசதியுமில்லை – ஆனால்
உலகம் பெரியது என கற்றுகொடுப்பேன் - இதைத்தான் 
நீ கடைபிடிக்கவேண்டுமென திணிக்காமல் இருப்பேன்...
தாழ்த்தப்பட்டவர்கள் என யாரையும் கூறச்சொல்லமாட்டேன்
சாதிபேரை சொல்லி பிறரை சங்கடபடுத்த விடமாட்டேன்
மதவாதிகள் என மனிதம் மாறச்செய்யமாட்டேன்
அயலானுடன் எந்நாளும் நட்பாய் பழகச்சொல்வேன்...!

கையை இறுக பிடிக்க சொல்வேன்
கயமுயா என கத்தாமல் வரசொல்வேன் - அப்பாவின்
கழுத்தில் உப்புமூட்டை ஏறச்சொல்வேன்
அம்மாவை மட்டும் (செல்லமா) கடிக்க சொல்வேன்
சாலையை வேகமாக கடக்க சொல்வேன்
பெரியவர்களிடம் பணிவாக ஆசிர்வாதம் வாங்கசொல்வேன்
ஆசிரியரை மதித்து நடக்கச் சொல்வேன்
அன்போடு பிறரிடம் பழகச் சொல்வேன்...!

கண்டதை வாங்கி சாப்பிடமாட்டோம்
கடனைப் பற்றி யோசிக்கமாட்டோம்
கடைவீதியில் சண்டை போடமாட்டோம்
இதையெல்லாம் செய்யாமலிருக்கவும் தயங்கமாட்டோம்...!

தாயும் ஒரு குழந்தைதான்
சேயும் ஒரு குழந்தைதான்
இருவரின் சேட்டைக்கு பலிகடாவாகுவேனோ...
பத்து மாதங்கள் ஓடிவிட்டது...
காத்திருப்புக்கு பலனும் கிடைக்கப்போகிறது...
தேவதை மண்ணில் வரும் நேரம்
இப்பூமியே அழகாய் மாறப்போகிறது...
இறைவன் தூவிய அன்பின் விதை 
மண்ணில் காலூன்ற போகிறது..!
.
.
-ஜோ. பிரிட்டோ ராஜ் கிளாரா

Tuesday, January 15, 2019

Happy Pongal - 2019 (தமிழர் திருநாள்)

உழவையும் உணவையும்
உலகுக்கு படைத்த நாள்🌾..!
முத்தமிழை மூவுலகோர்க்கு தந்த
மூத்தகுடி மக்களின் நாள்🌾..!
அன்பையும் அரணையும்
அறுவடை செய்த நாள்🌾..!
வரியவர்களுக்கு வாரிகொடுத்து
வந்தவனையும் வாழவைத்த நாள்🌾..!
மனிதமும் மண்ணுயிர்களும்
மகிழ்வில் பொங்கிய பொன்நாள்🌾..!
தலை நிமிர்ந்து தரணியே போற்றும்
தமிழர்களின் நந்நாள் - இன்று
தமிழர் திருநாள்🌞🌾..!
.
இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்
-ஜோ. பிரிட்டோ கிளாரா

Sunday, January 13, 2019

தீதின் இனி மைதீரா (பைந்தமிழ் 2019)


தீதின் இனி மைதீரா
முத லேற்றபதி னோடே
பிற தாழினை மடிபணியா
நுதனூற் இல்விதம் சேர்
பேதமி ழந்த நனினுடைய
புனைப் போரிலநா நின்
வினை வெய்னேற்றி தனி
சிதலமி னன்றி உடையான்
ஒற்றில் வினாபேடி நன்
கனகள் இனதே நலன்
எள்ளு உரை ஏட்டினை
மா நிதம் தேடான்
விந்த வகிதமே கானி
பிறளா விதி நல் மேவி
எந்திரள் ஆக நீற்றி
இறை வாழ் புவி தனிபோல்
மேன்மிதம் நன்னில் செய்யீர்..!
.
- ஜோ. பிரிட்டோ கிளாரா

Monday, December 31, 2018

இறைவனுக்கு ஒரு புத்தாண்டு மடல் (A New Year Letter to GOD 2019)


இறைவனுக்கு ஒரு மடல், புத்தாண்டு படி வேண்டி..!

எத்தனை புத்தாண்டுகள் வேண்டும்
எம்மக்கள் விடியல் காண இறைவா...
ஒவ்வொன்றாய் அடுக்குகிறேன்
உம்முன் தலைவா...!

ஒருவரையொருவர் மதிக்கும் மாண்பு தருவாயா
ஏழைகளுக்கு உதவும் கரங்கள் அருள்வாயா
பசி பஞ்சம் நாட்டைவிட்டு விலகச்செய்வாயா...
உழைப்பை சுரண்டா முதலாளி கொடுப்பாயா
விளைச்சலுக்கு உரித்தான ஊதியம் தருவாயா...
தொழிலாளிகள் கடன் சுமை குறையசெய்வாயா
நோயற்ற மனிதர்களாய்வாழ வழிசெய்வாயா...
அமைதியான குடும்பங்கள் அமைய செய்வாயா
தன்னிறைவுகாணும் செல்வம் கிடைக்க செய்வாயா...
மதங்களை வெறுக்கா மனநிலை கொடுப்பாயா
ஜாதிகளை ஒதுக்காத சகோதரத்துவம் கொடுப்பாயா...
பெண்ணியம் காக்கும் ஆண்மை அருள்வாயா
ஆணியம் வளர்க்கும் பெண்மை கொடுப்பாயா...
குடி இல்லா குடிமக்களாய் மாற்றித்தருவாயா
குடிசையில்லா வீடுகள் கட்டித்தருவாயா...
பேராசையில்லா மனிதனாய் வாழச்செய்வாயா
தவறான உறவுகளைவிட்டு விலகச்செய்வாயா...
பருவம் ஏமாற்றா காலநிலை அமைத்து தருவாயா
அழிவைதரும் இயற்கை சீற்றங்கள் அகற்றிவிடுவாயா...
சுரண்டல் இல்லா சமுதாயம் கொடுப்பாயா
நாட்டிற்கு நேர்மையான தலைவர்களை கொடுப்பாயா...
வளர்ச்சியில் முக்கியத்துவம் தரும் கட்சிகள் கொடுப்பாயா
வாழ்வாதாரத்தை அழிக்கா திட்டங்களை செயல்படுத்துவாயா...
இதோ எங்கள்...
தேவைகளைத்தான் உம்முன் அடுக்குகின்றோம் இறைவா...
இங்கு தேவைகளின்றி வாழ்க்கையில்லை தலைவா...
அன்பு வேண்டும்... அமைதி வேண்டும்...
வாழ்வும் வேண்டும்... வழியும் வேண்டும்...
வசதியும் வேண்டும்... வளமும் வேண்டும்...
இவைகளை பேண நல்ல மனிதம் வேண்டும்...
அருள்வாயா... – எம்மை
புதுபிறப்புகளாக மாற்றுவாயா...!
.
.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
.
பதில் தருவாய் என எதிர்பார்ப்புடன்
-      - ஜோ. பிரிட்டோ கிளாரா