வாழ்க்கையை வாழ்வோம்..!
நீலநிற குடை பிடித்த
வானம்
குடையை பதம்பார்க்கும்
மழை
நூல்கள் இல்லா
மேகங்கள்...
உணர்ச்சியில்லா காற்று...
சூட்டைகிளப்பம் சூரியன் -
என
புடைசூழ வாழும்போது -
எப்படி
நான் மட்டும்
தனிமையாவேன்..!
மனிதன் படைத்தவைகள்
மனிதனுக்கு நிலையில்லை...
கடவுளின் படைப்புகள்
மனிதனையடையாமல்
இருப்பதில்லை...
என்கின்றபோது - எப்படி
நான் மட்டும்
இல்லாதவனாவேன்..!
சத்தமில்லா இரவுகள்
பல்லை இளிக்கும்
நட்சத்திரங்கள்
தூக்க சோம்பலில் முகம்
குறைகூறும் அன்பு
தினந்தோறும் வேலை
அழுக்கான உடல்கள்
துள்ளி குதிக்கும்
உள்ளங்கள்
வியப்பாக நோக்கும்
ஆடிக்கார்கள்
வானளாவிய கட்டிடங்கள்
பார்த்து வியக்கும்
ஏழைகள்...
தூக்கி வீசப்படும்
உரிமைகள்
தட்டிக்கேக்கும்
போராளிகள்...
சேரை வீசும் உலகங்கள் -
அதில்
சோறு படைக்கும்
விவசாயிகள்...
ஓய்வறியா தினப்பணிகள்
எதிர்நோக்கும்
குடும்பங்கள்...
முன்னேற்றமில்லா
தொழிலாளர்கள் - அதில்
சேர்த்து வைக்கும்
முதலாளிகள்...
சுவரைத்தாண்டா சத்தங்கள்
- அதை
சந்தைப்படுத்தும்
சினிமாக்கள்...
வீரம் அறியா
விளையாட்டுகள் - அதை
விளம்பரப்படுத்தும்
சின்னதிரைகள்...
ஆள்வைத்து ஆதாயம் தேடும்
மக்கள் - அதில்
காசாக்கி கரைசேறும்
கட்சிகள்...
வீதியில் ஏழையின்
ஏப்பங்கள்
வானூர்தியில் பணக்காரனின்
பெருமூச்சுகள்...
கொசுக்கள் நாடும்
குடிசைவீடுகள் - அதை
அளிக்கும் ஆலை
மாடமாளிகைகள்...
ரோடு போட்டவனுக்கு
அரசுப்பேருந்து - அதில்
சொகுசாய் போவனுக்கு
மானியங்கள்...
கையேந்தும் வாயில்லா
ஜீவன்கள் - அதை
வித்தைகாட்டி ரசிக்கும்
மனிதங்கள்...
எல்லையில்லா
சுதந்திரங்கள் - அதில்
காலாச்சாரத்தை
பாடமாக்கும் அறிவிலிகள்...
ஓடுகின்ற காலங்கள் - அதை
ஓட்டிப் பார்க்கும்
கடவுள்கள்... - என
ஏதோ ஒரு சூழலில் சிக்கி
சிகரமானதை தேடி
ஓடிக்கொண்டிருக்கிறோம்..!
கடைசியில் கிடைப்பதென்னவோ
வெற்றிபெற்றால் கைதட்டும்
கூட்டமும்
தோல்வியுற்றால் வசைபாடும்
நண்பர்களும்தான்...!
கரை ஊன்றா பறவைகளுமில்லை
வலிகளை கடக்கா
மனிதனுமில்லை...
பிறரின் விமர்சனமும்
விருப்பங்களும்
கடலில் விழும்
மழைப்போன்றது
இனிப்பாய் பேசி
வீணற்றுப்போகும்...!
நம் எண்ணங்களும்
தேடல்களும்
கடலைச்சேரும்
நதிகளைப்போன்றது
எல்லாம் கடந்தபிறகே
கடைநிலைபோகும்...!
வருடங்கள் ஓடினாலும்
செல்வங்கள் கரைந்தாலும்
நடுக்கமில்லா மனமும்
சோர்வில்லா கால்களும்
போதும்
வாழ்க்கை வாழ்வதற்கே - என
புரிய வைக்கும்...
வாழ்க்கையை வாழ்வோம்
தன்னிறைவில்..!.
.
-ஜோ. பிரிட்டோ ராஜ்
No comments:
Post a Comment
Do U Like This...