வாழ்ந்திட துடிக்கின்றேன்
எத்தனை நாள் என்னை மறந்திருப்பீர் – இன்னும்
எத்தனை நாள் என்னை மறந்திருப்பீர்
இறுதிவரையிலும் மறந்து விடுவீரோ – என் வாழ்நாளில்
உன் தரிசனம் காணாமல் மறைந்து போவேனோ...!
மனித வாழ்க்கையே பாவங்களில் மூழ்கிபோகிறதோ
மீட்புப்பாதை சாவில் மட்டும் தான் தோன்றுகிறதோ...
நானும் உமது சாயல் தானே....
என் கண்நோக்கி பதில் தரமாட்டீரோ
என் விழிகளுக்கு ஒளியூட்ட மாட்டீரோ...
என் முழு இதயத்தோடு உம்மைப் புகழவில்லையோ – உம்
வியத்தகு செயலை அயலார்க்கும் பறைசாற்றவில்லையோ...
நானும் உமது பிள்ளை தானே...
நீர் என்னுடன் வருகையில் நான் மகிழ்ந்து ஆர்ப்பரித்தேனே
உமது உன்னதப்பெயரை போற்றி பாடினேனே..
எந்நாளும் நிலைத்திருக்கும் ஆசிப்பெருவேனா
உம் வலதுப்பக்கத்தில் அமரும் தகுதி பெறுவேனா...
நான் நேர்மையில் நிலைத்திருந்து
உம் முகம்கண்டு நிறைவு பெறுவேனா...
ஜோ. பிரிட்டோ ராஜ்,
இராமனாதிச்சென்புதூர்,
Prisma Paints, Bahrain

No comments:
Post a Comment
Do U Like This...