Monday, May 28, 2012

Dengue Fever - டெங்கு காய்ச்சல் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகள்

டெங்கு காய்ச்சல் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகள்


 


1. இந்த வைரஸ் ஏடீஸ் என்ற கொசு மூலம் பரவகிறது (பெண் கொசு மட்டுமே)


2. இந்த கொசு பகலில் கடிக்கும் பழக்கம் உடையது.


3. இவை சிறு பாத்திரங்கள், உடைந்த பாட்டிலகள், தேங்கய், இளநீர்ஓடுகள், பூந்தொட்டிகள், ஏர்கூலர் உள்ளே மட்டுமே முட்டையிடும்.


4. இவை தவிர கழிவு நீரிலோ சாக்கடையிலோ முட்டை இடாது.


5. எனவே டெங்குவை ஒழிக்க கொசு மருந்து அடிப்பதோ, சாக்கடையை சுத்தம் செய்வதோ பலன் தராது.


6. வீட்டை சுற்றிலும் கிடக்கும் பிளாஸ்டிக் பொருட்கள், பாட்டில்கள், தேங்காய் ஓடுகள், உரல், பழைய காலணிகள், பொருட்கள் எதுவாயினும் அதில் தேங்கியுள்ள சிறதளவுநீரை முழுவதுமாக வெளியேற்றினால் மட்டுமே டெங்குவை தடுக்க முடியும்.


7. உங்கள் வீடு மட்டிலும் இதைசெய்தாலே உங்கள் குழந்தைகளை காப்பாற்றமுடியும், ஏனெனில் இந்த கொசு மற்ற கொசுக்களை போல வெகு துரம் பறக்க முடியாது! உங்கள் வீட்டில் உற்பத்தியாகும் கொசு மட்டுமே உங்கள் குழந்தைக்கு ஆபத்து வரவழைக்கமுடியும், மறந்துவிடாதீர்கள்!


8. டெங்கு அனைவரையும் தாக்கினாலும் குழந்தைகளுக்கு மட்டுமே ஆபத்தானது. 30% குழந்தைகள் மிக ஆபத்தை நெருங்கலாம்


9. மிக முக்கியமானது ***பாதிக்கபட்ட, காய்ச்சல் உள்ள குழந்தைகள் மீண்டும் அது போன்ற கொசுக்களால் கடிக்கப்படும் போது மட்டுமே ஆபத்தான நிலமையை அடையும். இல்லயேல் அது சாதாரண காய்ச்சலாகவே முடியும்!


10. எனவே பாதிக்கப்பட்ட குழந்தைகளை கொசுவலையிட்டு பாதுகாத்தல் மிக மிக முக்கியம்


     இந்த செய்திகளை குழந்தை வைத்திருக்கிற அனைவருக்கும் தெரிய படுத்துங்கள.  



மக்கள்   நலன்  கருதி  வெளியீடுவோர்

புனித ரோச் இளைஞர்  நற்பணி மன்றம் 
இராமனாதிச்சன்புதூர் (தெற்கு)

No comments:

Post a Comment

Do U Like This...