Monday, April 1, 2019

Miss you Sister - Helen Anastus


அன்பு தங்கையே
எங்கள் அழுகுரல் கேட்கின்றதா...
ஆயிரம் கைகள் ஆறுதலாயிருக்க
ஆண்டவனைத் தேடி சென்றாயா...
என்று உன் குரலை கேட்டபேன் - இனி
என்று உன் முகத்தை பார்ப்பேன்...
குடிசையில் வாழ்ந்த போதும்
குதுகலமாய் இருந்தோமே - இன்று
தனி குடும்பமாய் ஆன பின்பு
கூடிவாழ வழியின்று பிரிந்து சென்றாயா...
இறைவா ஏன் எடுத்துகொண்டாய் - ஏன்
எங்கள் நிம்மதியை பறித்துவிட்டாய்...
மறுஜென்மம் வேண்டாம்
இப்பிறவியில் என் தங்கையை கொடு...
நிதம் கண்முன் நின்றவளுக்கு
நினைவு நாளை எண்ண வைக்காதே...
மன்றாடி உனைகேட்கிறேன் - எங்கள்
செல்வத்திற்கு மறுவாழ்வு பிச்சைகொடு...
எல்லாம் முடிந்தபின்பு
ஏன் இந்த கூப்பாடு...
இறக்கும் தருவாயில் 
அவள் அனுபவித்த வலியை நினைக்கையில் 
மனம் அமைதியடைய மறுக்கிறது...
நேற்று பார்த்த அவள்
இன்று இல்லை எனும்போது...
நாங்கள் யாரிடம் சென்று முறையிடுவது...
ஐந்து நிமிடம் ஓய்வின்றி ஓடியாடிதிரிபவள்
ஆறடி குழிக்குள் எப்படி அமைதியாயிருப்பாள்
இறந்தாலும் பரவாயில்லை - நீ
எங்களுடன் இருந்துவிடு...
பிரிந்து மட்டும் சென்றுடாதே
எங்களை உயிரோடு மட்கவைத்துவிடாதே...
கடல் தாண்டி வந்த அனுதாப அலை
கடைசி நிமிடத்திலாவது நீ விழித்திடமாட்டாயா
இறைவா ஆணையிடு
என் தங்கையை திருப்பிகொடு..!