Sunday, March 22, 2015

படிக்கவேண்டி எழுதியது... Reed Once again, It will change your Life


படிக்கவேண்டி எழுதியது...

ஆண்களுக்காக மாறும் பெண்களை விட
பெண்களுக்காக மாற்றிக்கொள்ளும் ஆண்களே அதிகம்..
துன்பம் இன்பம் என எல்லா சமயங்களிலும்
ஆண் நண்பர்களை காட்டிலும்
பெண் நண்பர்களை நம்பும்
ஆண்களே அதிகம்...

அநியாயத்தை அடக்கமுடியாமலும்
அடிமைத்தனத்தை ஒழிக்க முடியாமலும்
உள்ளதை பகிரமுடியாமலும்
சுதந்திரமாய் பேசமுடியாமலும்
வாழும் மனிதர்களில் ஆண்களை விட
பெண்களே அதிகம்..

உடைகளை உடுத்தும் விதம்
ஆணுக்கும் பெண்ணுக்கும் மாறுபடலாம்...
ஆணுக்கு முழுக்கால் சட்டையும்
பெண்ணுக்கு அரைக்கால் சட்டை என
நிர்ணயிப்பது யார்?

உடல் தெரியும் ஆடையானாலும்
உள்ளம் தெரியும் கோவிலானாலும்
பார்க்கும் கண்களால் தான்
வித்தியாசத்தை உணரமுடியும் - அதைப்போல்
ஆபாச ஆடைகளின் அழுக்கு
பார்க்கும் மனிதர்களின் கண்களில் மட்டுமல்ல
உடுத்தும் மனிதர்களின் மனதிலும் உள்ளது...

பெண்களை போற்றுவோம்
ஆண்களை மதிப்போம்
வன்முறையில்லா, பாகுபாடற்ற
சமஉரிமை சமுதாயத்தை உருவாக்குவோம்...

-- பிரிட்டோ

Sunday, March 8, 2015

பெண்களை பெண்ணாக வாழவிடுங்கள் ( women's Day - Living Brave )




ஆதிக்கம்
அடிமைத்தனம்
புறக்கணிப்பு
அவமானப்படுத்துதல்
ஏமாற்றங்கள்...
அனைவருக்கும் பொதுவானதே...!

இதில் ஆண் பெண் பாகுபாடு எதற்கு?
இரக்கம், அனுதாப திணிப்புகள் பெண்கள் மீது ஏன்?

சம உரிமை என்று சொல்லியே
சந்தைகளில் ஏலம் விட்டது போதும்..
பெண்களை பெண்ணாக வாழவிடுங்கள்...!

நீ நீயாகவே இரு...
நான் நானாகவே வாழ்கிறேன்...!

குறிப்பு: நீ என்னய்யா பெண்களுக்கு சமவுரிமை கொடுப்பது...!

-பிரிட்டோ