Sunday, December 27, 2015

We want U Sagayam IAS as CM - லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்துவோம்

மிகப்பெரிய மாற்றங்கள் சிறிய விதையில் இருந்துதான் தொடங்கும். 
நாம் விதைத்த விதையும் விருட்சமாய் வளரும். 
நம்பிக்கையுடன் தொடர்ந்து களப்பணி செய்வோம். 
அண்ணன் சகாயம் அவர்களை முதல்வர் ஆக்குவோம். 
ஊழல் அற்ற நேர்மையான ஆட்சி அமைப்போம். 
லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்துவோம்.


Monday, November 9, 2015

தீபாவளி செல்பீ - Selfie with Diwali

உங்கள் தீபாவளி செல்பீக்கள் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும். 

நன்றி - தமிழ் கிஸ்பாட்.

முன்னாடி - பின்னாடி : கண்ணாடி முன்னாடி நின்னு செல்பீ எடுக்கும் போது பின்னாடி யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.




ஃப்ளாஷ் ஆஃப் : முன்பக்க கேமிராவை பயன்படுத்தும்போது ஃப்ளாஷ் ஆஃப் செய்ய மறக்க கூடாது. இல்லையென்றால், செல்பீயில் உங்கள் முகம் இப்படிதான் இருக்கும்.





கழுத்து : படுத்துக்கொண்டே செல்பீ எடுக்கும் போது, கழுத்தை இப்படி நேராக வைத்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் அமுல்பாய் போல் தெரியும். 


போஸ் : யார் செல்பீ எடுக்க அழைத்தாலும் உடனே போஸ் கொடுத்து விடக்கூடாது. ஒருவேளை அவர்கள் கையில் இருப்பது 'பிஸ்க்ட்'டாக கூட இருக்கலாம்.


பின்னணி : நாம் அணிந்து இருக்கும் உடையின் நிறமும், பின்னணியும் ஒரே நிறத்தால் இருந்தால் நல்லது.


ரியாக்ஷன் : என்ன ரியாக்ஷன் தர போகிறோம் என்று முன்கூட்டியே முடிவு செய்து வைத்துக்கொள்வது நல்லது. இல்லையென்றால் குழப்பமான ரியாக்ஷன் தான் தர நேரிடும். 


அப்பா பிள்ளை : செல்பீயில் அப்பா பிள்ளை போல அல்லது அம்மா பிள்ளை போல காட்டிக்கொள்வது நல்லது.


அவசியமில்லை : எல்லா செல்பீயிலும் கண்களை திறந்து வித விதமாக முழிக்க வேண்டும் என்று அவசியமில்லை.


தவிர்த்து விடுங்கள் : கோபமாக இருக்கும் போது செல்பீ எடுப்பதை தவிர்த்து விடுங்கள்.


டக் ஃபேஸ் : பாத்ரூமில் மட்டும் தான் டக் ஃபேஸ் செல்பீ எடுக்க வேண்டும் என்று எந்த அவசியமில்லை.


பாவம் : என்ன செய்வது என்று தெரியாத நேரத்தில் செல்பீ எடுப்பது பெரிய பாவம். மேலும் அதை அப்லோட் செய்வது தேச குற்றத்திற்கு சமம்.



போராட வேண்டும் : எதிர்பார்த்தபடி செல்பீ வரும் வரை போராட வேண்டும். "நம்ம மூஞ்சிக்கு இதுவே போதும்" என்று சலித்துக்கொள்ளவே கூடாது.



கூடாது கூடாது : சாப்பிடும் போது டிவி பார்க்க கூடாது, பேச கூடாது, அதிகம் தண்ணீர் குடிக்க கூடாது கூடவே செல்பீயும் எடுக்க கூடாது. 


நம்பிக்கை : முதலில் நம்பிக்கை வேண்டும். "அட நம்ம மூஞ்சியா இது..!!!" என்று ரொம்ப வாயை பிளக்க கூடாது..!


செல்பீ எடுங்கள்.. தீபாவளியை கொண்டாடுங்கள்...