Tuesday, October 18, 2011

கூடங்குளம் அணுமின் நிலையம்! வேண்டாமே விபரீதம்..


Nuclear disaster

 
இயற்கையின் இடர்பாடுகளால் மட்டுமல்ல, மனிதனின் சின்னஞ்சிறு தவறுகளினாலோ அல்லது இயந்திர & மின்னணு சாதனங்களின் சின்னஞ்சிறு பழுதுகளினாலோ கூட மிகப்பெரிய விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன என்பது தான் அணுமின் நிலையங்களின் வரலாறு.
இதற்கு அமெரிக்காவின் த்ரீ மைல் ஐலேண்ட், இரஷ்யாவின் செர்னோபில்விபத்துக்களை உதாரணமாகக் கூறலாம்.
தவறான முடிவுகளை மிகச்சரியாக எடுப்பதில் நமது இந்திய நடுவண் அரசிற்க்கு நிகர் வேறெதுவுமில்லை என்பதை நிரூபிப்பது போலத்தான் சமீபகால நிகழ்வுகள் இருக்கின்றன.  அதிலொன்று தான் கூடங்குளம் அணுமின் நிலையம். இயக்கத்தில் இருக்கும் அணுமின் நிலையங்களை படிபடியாக மூடுவிழாவினை மேற்கத்திய நாடுகளுடன் (அமெரிக்கா, ஐரோப்பா) தரத்திற்கும், பாதுகாப்பிற்கும் உலகப்புகழ் பெற்ற, இயற்கையின் சீற்றத்தால் சீண்டப்பட்டு பேரழிவிற்கு உள்ளான ஜப்பானும் நடத்திக்கொண்டேயிருக்க. இந்தியா மட்டும் ஏனோ இதில் பேரார்வம் காண்பிக்கின்றது.   இதில் என்ன ஒரு கேலி என்றால், கூடங்குளம் அணுமின் நிலையமனாது.. இரஷ்ய தொழில்நுட்பத்துடன் 4 அடுக்கு பாதுகாப்புகளுடன் கூடியது என்கின்றனர். ஆனால் அந்நாட்டில் நிகழ்ந்த செர்னோபில் அணுமின் நிலைய விபத்து தான் உலகிலேயே மிகக் கொடூரமானது.
த்ரீ மைல் ஐலேண்ட்(அமெரிக்கா) :  1979ம் ஆண்டு மார்ச் மாதம் 28ந் தேதி அணு உலையினைக் குளிரூட்டும் சாதனத்தின் ஒரு இயந்திர வால்வில் ஏற்பட்ட பழுதால், உலையினை குளிரூட்ட வேண்டிய திரவம் வராததினால், அதே நேரத்தில் உலையிலுள்ள திரவத்தினை வெளியேற்றும் பம்ப்புகள் பணிபுரிந்ததால் அந்த உலையின் உஷ்ணம் கூடியது. மாற்று ஏற்பாடாக எமர்ஜென்ஸி கூலிங் ஸிஸ்டம் இருந்தும் போதுமானதாக இல்லை. குறை எங்கேயுள்ளது எனக் கண்டறிவதற்கே 2 மணி நேரமாக அதற்குள் ஹைட்ரஜன் கூடிப்போக அவ்வுலை வெடித்து சிதறியது.
செர்னோபில் (இரஷ்யா): 1986ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ந்நதேதி மின்நிலையத்தின் ஒரு யூனிட் வழமையான இயக்கத்திலன்றி, உலையின் பாதுகாப்பு / மின்உற்பத்தி திறனை பரிசோதித்துக் கொண்டிருந்தனர்.  பரிசோதனையின் போது நிகழ்ந்த விளைவுகள் சீராக இன்றி தாறுமாறாக வந்தவண்ணமிருந்தன.  கிராஃபைட்டுகளைக் கொண்டு இவர்கள் சில சோதனை முயற்சிகளை புரியும் போது எதிர்பாராத விதமாக பெருந்தீ மூளஅதனை அணைக்க திரவ நைட்ரஜன், மணல், நியூட்ரான்களை உள்வாங்கும் இராசயனங்கள் எனவான் வழியாகவும், தரைவழியாகவும் வரை கிட்டத்தட்ட 5000டன் (1 டன்= 1000கிலோ) பொருட்களை வீசிய பின்பே தீயினைக் கட்டுக்குள் கொணர முயன்றது. இரண்டு நாட்களாக நிகழ்ந்த இப்போராட்டங்களை வெளியுலகிற்கு தெரியாமலே இருக்க, வான் மேகக் கூட்டங்கள் வாயிலாகவும், அங்குள்ள பறவை போன்ற உயிரினங்கள் மக்கள் அடர்த்தி மிகுந்த நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அணுக்கதிர் வீச்சையும் கழிவுகளையும் கொண்டு சேர்த்தது.
சுவீடன் நாட்டு விஞ்ஞானிகளிகள் கிழக்கிலிருந்த வந்த இயல்பிற்கும் மீறிய கதிர்வீச்சினைக் கண்டுபிடித்த பின்னரே உலக அரங்கிற்க்கு இவ் விபத்து குறித்து தெரிய வந்தது.
  இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா ஜப்பான் ஹிரோஷிமா, நாகசாகி மீது அணுகுண்டு வீசிய போது எழுந்த கதிர்வீச்சினை விட 200 மடங்கு சக்தி வாய்ந்ததாக இருந்தது இரஷ்யாவின் செர்னோபில்அணுமின் நிலைய விபத்தில்!
மற்ற ஆலைகளைப்போல் அணுமின் நிலையக் கழிவுகளை அவ்வளவு எளிதாக கருத்தில் கொள்ளமுடியாது.  ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு சேமித்து பாதுகாப்புடன் வைத்திருக்க வேண்டும். அணுகழிவுகளுக்காக 3 இலட்ச டன் சிமெண்ட் அடர்த்திகொண்டு கான்கிரீட்டால் கட்டப்பட்ட அறையே விபத்திற்க்குப் பின்பு இன்று கேள்விக்குறியாகிவிட்டது.
 நம் நாட்டின் மொத்தத் தேவையான மின்சாரத்தில் 5% கூட ஒட்டு மொத்த அணுமின்நிலையங்களால் கொடுத்துவிட முடியாது. உலகமே இதற்கு படிப்படியாக மூடுவிழா நடத்தும் போது வளர்ந்த நாடுகள் நமக்கிற்கு உதவ முன்வருவதை நினைத்தால்... அவர்களின் ஆராய்ச்சிக்கும், பரிசோதனைக்கும் நாம் ஒரு தளமாகி வருகின்றோமோ எனும் ஐயம் நிறையவே எழுகின்றது.
இதுவரை மிகப்பெரியத் தொகையினை முதலீடு செய்த பின்பு பின்வாங்குவது உசிதமல்ல என்கின்ற பொருளாதார / வணிக சிந்தனையை கழற்றிவிட்டு, மின் அணு உலை விபத்தில் மாசடைந்த செர்னோபில் நகரை தூய்மைப்படுத்த இன்னமும் இயலவில்லை என்கின்ற வேதனையான உண்மையினை உணர்ந்து வருங்காலங் குறித்த தொலைநோக்குப் பார்வையுடன், மனித சமூகத்தின் பாதுகாப்பு உணர்வுடன் அணுக வேண்டியது தான் இன்றைய தேவை!
பேரழிவு என்பது விபத்தின் போது மட்டுமல்லஅதன்பின் வரும் பல தலைமுறைகளுக்கும் புற்றுநோய் போன்றவைகள் மட்டுமல்ல.. மரபணு மாற்றங்களால் மனித இனம் உட்பட அனைத்து உயிரினங்களும் பாதிக்கப்படும் என்பதற்கு மேற்காணும் உக்ரைன் தேசிய அருங்காட்சியகப் புகைப்படமும் கீழ்காணும் செர்னோபில் விபத்திற்க்குப் பிந்தையதொரு பிரசவமும் ஒரு சான்று! பார்ப்பதற்கே மனம் பதைக்கும் புகைப்படங்களை பிரசுரிக்க மனம் துணியாததால் இத்துடன் முடித்துக்கொள்கின்றேன். 
 
சிக்கிமில் நிகழ்ந்த நிலநடுக்கம், கூடங்குளத்தில் நிகழாது என்பது என்ன நிச்சயம்?! இயற்கையை துல்லியமாகக் கணிப்பவர்கள் எவருமில்லை.
ஒரு நாடு இன்னொரு நாட்டுடன் போரிடும் போது முக்கிய நகரங்களை மட்டுமல்ல தொழிற்சாலைகளையும், அணுமின் நிலையங்களையும் தாக்கும் அபாயம் உள்ளது. 1980லிருந்து இதுவரை 6 முறை அணு உலைகளின் மீது தாக்குதல் உலக நாடுகள் ஒன்றையொன்று தாக்கிக் கொள்ள முயற்சி நடந்துள்ளது.
வறட்டுக் கொள்கைகளுக்காகவோ அல்லது அரசியற் காழ்ப்புணர்விற்க்காகவோ கண்மூடித்தனமாக அணுமின் நிலையங்களை எந்நிலையிலும் வரவேற்க வேண்டாம்!
கூடங்குள மக்களின் போராட்டத்திற்க்கு தார்மீக ஆதரவு தெரிவிப்போம்! இது ஏதோ அந்த ஊர் மக்களின் பிரச்னை என்றிராமல், ஒட்டுமொத்த தமிழகமும் அணிதிரண்டு ஆளும் அரசிற்கு உணர்த்துவோம்! வென்றிடுவோம்!!
நன்றி:
 
Ref: 

Friday, October 7, 2011

KINDNESS Costs NOTHING - Donate Eyes

Somebody did a good analysis
bgdfbg.jpg
India's Total Population 118 Crores. Daily Death - 62389 Daily Birth - 86853 Total Blinds - 682497

If Daily Dead People Donate their Eyes,
within
11 Days all Blinds will be able to See.
imagesCAK719KZ.jpg

Then in India there will b NO Blinds. Don't Delete this message without Sending Atleast to 1 Person
KINDNESS Costs NOTHING.
rgegdfrg.jpg
gerg.bmp
help them also to see like us
imagesCA4N34WG.jpg