Wednesday, August 12, 2015

தாயின் மணிக்கொடி பாரீர் - Thaayin manikkodi pareer Indian Flag song


 தாயின் மணிக்கொடி பாரீர் -அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட  வாரீர்


1.ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் -அதன்
உச்சியின் மேல்  வந்தே மாதர மென்றே
பாங்கி னேழுதித் திகழும் -செய்ய
பட்டொளி வீசிப் பறந்தது பாரிர்! (தாயின்)

2.பட்டுத்  துகிலென லாமோ? -அதிற்
பாய்ந்து சுழற்றும் பெரும்புயற் காற்று
மட்டு மிகுந்தடித்தாலும் -அதை
மதியாதவ் வுறுதிகொள் மாணிக்கப்  படலம் (தாயின்)

3.இந்திரன் வச்சிர மோர்பால்-அதில்
எங்கள் துருக்க ரிளம்பிறை யோர்பால் (தாயின்)
மந்திர நடுவுறத் தோன்றும் -அதன்
மாண்பை வகுத்திட வல்லவன் யானோ?(தாயின்)

4.கம்பத்தின் கீழ்நிற்றல் காணீர் -எங்கும்
காணரும் வீரர் பெருந்திருக்  கூட்டம்
நம்பற் குரியரவ் வீரர்-தங்கள்
நால்லுயி ரீந்துங் கொடியினைக் காப்பார்.(தாயின்)

5.அணியணி யாயவர் நிற்கும்-இந்த
ஆரியக் காட்சியோ ரானந்த மன்றோ?
பணிகள் பொருந்திய மார்பும் -வீறற்
பைந்திரு வோங்கும் வடிவமுங் காணீர்!(தாயின்)

6.செந்தழ்நாட்டுப் பொருநர் -கொடுந்
தீக்கண் மறவர்கள் , சேரன்றன் வீரர்
சிந்தை துணிந்த தெலுங்கர் -தாயின்
சேவடிக் கேபணி செய்துடு துளுவர். (தாயின்)

7.கன்னட ரொட்டியரோடு -போரிற்
காலனு மஞ்சக் கலக்கு மராட்டர்
பொன்னகர்த் தேவர்க் கொளப்ப- நிற்கும்
பொற்புடை யாரிந்து ஸ்தானது மல்லர்.  (தாயின்)

8..பூதல முற்றிடும் வரையும் -அறப்
போர்விறல் யாவும் மரப்புறும் வரையும்
மாதர்கள் கற்புள்ள வரையும் -பாரில்
மறைவரும் கீர்த்திகொள் ராஜபுத்ர வீரர் (தாயின்)

9.பஞ்ச நததுப் பிறந்தோர் -முன்னைப்
பார்த்தன் முதற்பலர் வாழ்ந்த நன் னாட்டார்
துஞ்சும்பொழுதினுந் தாயின் -பதத்
தொண்டு நினைத்திடும் வங்கத்தி னோரும் (தாயின்)

10.சேர்ந்ததைக் காப்பது காணீர் - அவர்
சிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க!
தேர்ந்தவர் போற்றும் பரத -நிலத்
தேவி துவஜம் சிறப்புற வாழ்க (தாயின்)

Tuesday, June 23, 2015

எனது இதயம் தொடர்ந்து செல்லும் - தமிழ் கவிதை



ஒவ்வொரு இரவும் எனது கனவுகளில்
உன்னை பார்க்கிறேன்.. உன்னை உணர்கிறேன்...

தூரம் அதிகம் இருப்பினும்  - இருவருக்கும் இடையிலான இடைவெளி அதிகம் இருப்பினும்
நீ என்னுடன் இருப்பதை நான் உணர்கிறேன்...

அருகிலோ, தூரத்திலோ, நீ எங்கு இருந்தாலும்
எனது இதயம் உன்னைத் தொடர்ந்து செல்வதாக
நான் நம்புகிறேன்
மீண்டும் ஒரு முறை எனது
இதயக் கதவைத் திறந்து பார்
எனது இதயத்தில் நீ இருப்பாய்
எனது இதயம் தொடர்ந்து செல்லும்...

காதல் ஒரு முறைதான் நம்மைத் தொட்டுச் சென்றது ஆனால் அது காலம் முழுவதும் நம் கூட வரும் எப்போதும் நம்மை விட்டு அது அகலாது
நாம் முடிந்து போனாலும்...!

நான் உன்னைக் காதலித்தபோது
காதலையும் காதலித்தேன்
வாழ்க்கை முழுவதும் எப்போதும்
நாம் சேர்ந்தே இருப்போம்...

அருகிலோ, தூரத்திலோ, நீ எங்கு இருந்தாலும்
எனது இதயம் உன்னைத் தொடர்ந்து செல்வதாக
நான் நம்புகிறேன்...
மீண்டும் ஒரு முறை எனது
இதயக் கதவைத் திறந்து பார்
எனது இதயத்தில் நீ இருப்பாய்
எனது இதயம் தொடர்ந்து செல்லும்...

நீ என் அருகில் இருக்கிறாய்..
எனக்கு எந்தப் பயமும் இல்லை
எனது இதயம் தொடர்ந்து செல்லும்..

நான் அறிவேன் நாம் இருவரும் சேர்ந்திருப்போம்.. இப்படியே என் இதயத்தில் நீ பத்திரமாய்
எனது இதயம் தொடர்ந்து செல்லும்..
தொடர்ந்து செல்லும்...!